என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூலைக்கரைப்பட்டி பள்ளியில் பெற்றோர்கள் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.
மூலைக்கரைப்பட்டியில் இன்று தொடக்க பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்
- கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
- ஏற்கனவே இருந்த கழிவறையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
இங்கு மூலைக்கரைப் பட்டி சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த 450 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
முற்றுகை
கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி திறக்கப் பட்டது. மாணவ-மாணவி கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி கள் இல்லை. கழிவறை களும் கட்டப்படவில்லை. ஏற்கனவே இருந்த கழிவறையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
புதிய கழிப்பறை கட்டும் பணிகள் மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதுபோல பாது காக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யவில்லை.
இதையடுத்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.






