என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழையபேட்டை பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் ஆறுபோல செல்லும் தண்ணீர்
    X

    சாலையில் வீணாக செல்லும் தண்ணீரை பிடித்து குளிப்பவரை படத்தில் காணலாம்.

    பழையபேட்டை பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் ஆறுபோல செல்லும் தண்ணீர்

    • பழையபேட்டை, காந்திநகர் பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.
    • 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சில இடங்களில் பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட பழையபேட்டை, காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. பழையபேட்டை அரசு பள்ளி அருகே நேற்று பணிக்காக தொழிலாளர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது குடிநீர் குழாயை உடைத்ததாக தெரிகிறது. இதனால் குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. சாலையில் வீணாகி செல்லும் தண்ணீரை பிடித்து சிலர் அங்கேயே குளித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது. 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றால் இப்பகுதி வழியாக தண்ணீர் செல்வதை நிறுத்த வேண்டும். அப்படி செய்தால் பல கிராமங்களுக்கு தண்ணீர் செல்லாமல் இருக்கும். இதனால் அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்யாமல் உள்ளனர்.

    இந்த தண்ணீர் பாதாளச் சாக்கடைக்கு தோண்டப் பட்ட பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. மேலும் இன்று வரை 2 நாட்களாக ஆறுபோல் தண்ணீர் சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் செல்வோர் பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சகதிக் காடாக காட்சி யளிக்கிறது. எனவே உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்த தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×