என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
    • பட்டாசு கடை நடத்தும் இடம் பாதுகாப்பானதாக இருத்தல் அவசியம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை மற்றும் பிற பண்டிகைகள், திருவிழா காலங்களில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விரும்புவோா் வெடிபொருள் சட்டம் 2008 விதி 84 - ன் கீழ் உரிய ஆவணங்கள் மூலம் இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் விண்ணப் பிக்கலாம். இந்த உரிமமானது வழங்கப் பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் வரை மட்டுமே செல்லத்தக்கதாகும்.

    படிவம் ஏ.இ.-5-ல் விண்ணப்பப் படிவம், உரிமக் கட்டணமாக ரூ.500 அரசு கருவூலத்தில் செலுத்திய செல்லான், கடையின் வரைபடம், புகைப்படம் - 2, வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்தப்பத்திரம், அதன் வீட்டு வரி ரசீது நகல், சொந்தக்கட்டிடம் எனில் வீட்டு வரி ரசீதின் நகல், நெல்லை துணை இயக்குநா் (சுகாதாரப் பணி) தடையின்மை சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசு கடை நடத்தும் இடம் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பானதாகவும் இருத்தல் அவசியம்.

    ஏற்கெனவே கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபா்கள் அதே இடத்தில் மீண்டும் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்தால், அதற்கான உரிமத்தையும் விண்ணப் பத்துடன் இணைத்து இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
    • விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்களை ஆய்வு செய்து மின் வினியோகம் வழங்க உத்தரவிடப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நெல்லை மின் பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திர சேகரன் கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்க ளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சங்கரன் கோவில் கோட்ட செயற்பொறி யாளர் பால சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியா ளர்களும் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தின் போது விவசாய மின் இணைப்பு சுயநிதி அடிப்படையில் விண் ணப்பித்த விண்ணப் பங்களை ஆய்வு செய்து உடனடியாக மின் வினியோகம் வழங்கவும், சங்கரன்கோவில் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரி களுக்கு மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவிட்டார்.

    • தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.
    • கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் விளைவாக பிரதான அணையான 142 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 19 அடி உயர்ந்த நிலையில், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 94.40 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 106.17 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,909 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 51.60 அடியாக உள்ளது. அணைக்கு 340 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 3.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. களக்காட்டில் 1.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, காக்காச்சி மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. அந்த அணை முழுகொள்ளளவான 36 அடியை எட்டி 2 வாரங்களுக்கும் மேலாக உபரிநீர் வெளியேறி வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 98 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படு கிறது. குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையில் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து இன்று காலை 116 அடியை எட்டியது. அந்த அணை நிரம்ப இன்னும் 16 அடி நீரே தேவைப்படுகிறது.

    கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது. ராமநதி நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 64 அடியாக உள்ளது. கருப்பாநதியில் 44.62 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து உள்ளது.

    குற்றாலம் அருவி பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்து வருகிறது. அங்கு மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • நேருஜி நினைவு நகர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
    • புறம்போக்கு நிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் மாட்டுதொழுவத்தை கட்டியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் சரவணன் தலைமையில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    மாநகராட்சி துணை கமிஷனர் தாணு மூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, பேட்டை 18-வது வார்டுக்கு உட்பட்ட நேருஜி நகர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், நேருஜி நினைவு நகர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அந்த பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதுமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாநகர செயலாளர் துரைப் பாண்டியன் தலைமை யில் நிர்வாகிகள் அளித்த மனு வில் கூறியிருப்ப தாவது:-

    மேலப்பாளையம் மண்டலம், வார்டு 46-க்கு உட்பட்ட மேலநத்தம் டாக்டர் அம்பேத்கர் காலனி முப்புடாதி அம்மன் கோவிலின் கீழ் பக்கத்தில் உள்ள இடமானது மக்கள் பயன்பாட்டிற்கும், சிறுவர் விளையாடும் இடமாகவும் இருந்தது.

    தற்போது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் ஆக்கிரமித்து மாட்டுதொழுவத்தை கட்டியுள்ளார். இந்த நிலத்தை மீட்க கோரி ஏற்கனவே பலமுறை புகார் மனு அளித்துள்ளேன். உடனடியாக புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள மாட்டு தொழுவத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை அப்புறப்படுத்தி அப்பகுதியில் வசிக்கும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றிட வழிவகை செய்திட வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விரைவில் நிறைவேற்றி தர தீர்மானிக்கப்பட்டது.
    • நாட்டு நலப்பணித்திட்ட முகாமை பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் கு.பார்வதி மோகன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் லவ்லின் மேபா, துணைத்தலைவர் நம்பி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விரைவில் நிறைவேற்றி தர தீர்மானிக்கப்பட்டது. மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.முகாமை பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தொடங்கி வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லதாராணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பி.குமார், மகாராஜன், பேரூராட்சி மன்ற அலுவலர்கள் ஆறுமுகம், கலையரசி, நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் ஆவுடையப்ப குருக்கள், ரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது.
    • டாஸ்மாக் கடை பக்கத்திலேயே ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் நெல்லை உடையார் தலைமையில் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். அதில் கூறி யிருப்பதாவது:-

    நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது. இதன் முன்பு மீனாட்சிபுரம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் இந்த கடையை உடனடியாக அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக அந்த கடையை அப்புறப்பத்த வேண்டும்.

    இதன் பக்கத்திலேயே பாரதியார் படித்த ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இதன் அருகிலேயே நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. மேலும் பெருமாள் கோவிலும் இதன் அருகே இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது குடிமகன்கள் சாலைகளில் வீசி செல்லும் மது பாட்டில்கள் காலில் காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

    இது தொடர்பாக பல முறை மனு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மனுவை விசாரித்து உடனடியாக டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

    அப்போது தொழிற்சங்க தலைவர் மாயாண்டி, தொழிற்சங்க செயலாளர் நாகராஜன், கார்த்தீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சுயம்புலிங்கசுவாமி கோவில் கடற்கரையில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நாட்டுநல பணி திட்ட மாணவ -மாணவிகள் பனைவிதைகளை விதைத்தனர்.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி சார்பில் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் கடற்கரையில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மேஜர்ராஜன் தலைமை தாங்கினார். உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், கல்லூரி தமிழ் துறை தலைவர் நிர்மலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நாட்டுநல பணி திட்ட மாணவ -மாணவிகள் பனைவிதைகளை விதைத்தனர். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலபணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளியப்பன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.ம.மு.க. வை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மகளிர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜ.எஸ்.இன்பதுரை முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே..சீனிவாசன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், முன்னாள் எம்.பி.யும், மாவட்ட பொருளாளருமான சவுந்தர்ராஜன், ராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளருமான மைக்கேல் ராயப்பன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட விவசாய அணி இணைச்செயலாளர் லாசர், ராதாபுரம் மேற்கு ஓன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஓன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளரும் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவருமான அம்மா செல்வகுமார், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அருண் புனிதன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சி ராணி, திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார், வள்ளியூர் பேரூர் செயலாளர் பொன்னரசு, முடவை ஜமீன் பாரதி ராஜா, செட்டிகுளம் ராமச்சந்திரன், நிர்வாகிகள் எட்வர்ட் சிங், சந்திரமோகன், பணகுடி பேரூர் துணை செயலாளர் ஜோபி ஜெகன், பணகுடி ேபரூர் இளைஞரணி ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பி னர்கள் அர்ப்பணிப்புடன் முழு பங்காற்ற வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, அ.ம.மு.க. வை சேர்ந்த பிரேமா தலைமை யில் 20-க்கும் மேற்பட்ட மகளிர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை புறநகர் பகுதிக்கு உட்பட்ட நகர, கிளை செயலாளர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், பூத் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • சுசிலா மூகாம்பிகை களக்காட்டில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • தனது தோழியுடன்,சுசிலா மூகாம்பிகை மீண்டும் செல்போனில் பேசினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழச்சாலைபுதூரை சேர்ந்தவர் ராஜபூலோக பாண்டியன். இவரது மகள் சுசிலா மூகாம்பிகை (வயது15). இவர் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சுசிலா மூகாம்பிகை, தனது தோழியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். நேற்று மாலை மீண்டும் அவர் தனது தோழியுடன் செல்போனில் பேசினார்.

    இதைப்பார்த்த அவரது தாயார் அவரை கண்டித்தார். இதனால் மனம் உடைந்த சுசிலா மூகாம்பிகை வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ராதாபுரத்தில் 14 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அவற்றின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு கடந்த 2 நாட்களாக 6 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுமார் 15 அடி நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று 89 அடியாக இருந்த நிலையில், தொடர் நீர்வரத்தால் மேலும் சுமார் 4 அடி உயர்ந்து இன்று 92.75 அடியை எட்டியது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 107.61 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 3247 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது.

    அணை பகுதிகளில் அதிகபட்சமாக சேர்வாறில் 6 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 8 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 0.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. 52 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 28.75 அடி நீர் இருப்பு உள்ளது.

    புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ராதாபுரத்தில் 14 மில்லிமீட்டர் மழை பெய்தது. பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் கன்னிமாரா தோப்பு ஓடையில் தண்ணீர் செல்கிறது. மாவட்டத்தில் பல இடங்களில் சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் வள்ளியூர், ராதாபுரம், பணகுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் கன்னிமாரா தோப்பு ஓடையில் குளிக்க இன்று காலை முதல் வந்தனர்.

    ஆனால் தொடர் சாரல் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாஞ்சோலை வனப்பகுதியை பொறுத்தவரை காக்காச்சியில் 35 மில்லிமீட்டர் மழை பெய்தது. நாலுமுக்கில் 19 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 15 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் 98 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி 31.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 113.75 அடியை எட்டியுள்ளது. ராமநதி நீர்மட்டம் 63 அடியாகவும், கடனா அணையில் 55 அடியாகவும் நீர் இருப்பு உள்ளது.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் கூட்டமும் அலைமோதி வருகிறது.

    • கடையில் இருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்க சென்றபோது இந்த வெறிச்செயல் நிகழ்ந்துள்ளது.
    • கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோரில் வேலை செய்யும் சந்தியா (18) என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்க சென்றபோது இந்த வெறிச்செயல் நிகழ்ந்துள்ளது.

    ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் அருகே நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இளம்பெண் கொலை தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    • தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
    • தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தீபாவளி முடியும் வரை செயல்படும்.

    நெல்லை:

    மகாத்மா காந்தியடி களின் 155-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாளை ஆயுதப்படை சாலையில் உள்ள கதர் அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு காந்தியடிகளின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சிறப்பு விற்பனை

    தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    மகாத்மா காந்தியடி களால் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டு மென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.

    இந்த வாரியத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் பாளையில் கதர் அங்காடி, காலணி உற்பத்தி அலகும், பேட்டையில் தச்சுக்கொல்லு உற்பத்தி அலகும், வீரவநல்லூரில் 5 கைத்தரிகளும் இயங்கி வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதார நிலை உயர்வு செய்யப்பட்டும் காந்தியின் கொள்கையிளை முழுவதுமாக கடைபிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2022-2023-ம் ஆண்டிற்கு ரூ.46.25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.34.05 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருட்கள் ரூ.28.50 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    காந்தி பிறந்த நாளையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி கள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் இன்று முதல் தீபாவளி முடியும் வரை செயல்படும். மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள் மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேனி, குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பணை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குநர் பாரதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, கண்காணிப்பாளர் சரவணராஜா, கதர் அங்காடி மேலாளர் ஜானி சாமுவேல், உதவி இயக்குநர், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×