search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "firecracker shops"

    • கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்தனர்.
    • கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா என்றும் பார்வையிட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா, பட்டாசு கடைக்கு தேவையான பொருட்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் ஏதேனும் அங்கு உள்ளதா தீ தடுப்பு சாதனங்கள் முறையாக வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என்றும் பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.

    • தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பட்டாசு, இனிப்பு மற்றும் ஜவுளிகள் வாங்கி பண்டிகையை உற்சாகமுடன் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

    அனுமதி

    இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. தற்போது கடைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்று கடைகளில் பட்டாசுகள் வியாபாரத்திற்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் சிவகாசியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரக பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    ஆர்வம்

    பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு ஆர்வமாக பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள். சிறுவர்களும், பெரியவர்களும் பட்டாசு கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் பட்டாசு கடைகளில் மேலும் கூட்டம் குவியும் என்பதால் புதிய ரக பட்டாசுகளை வாங்கி விற்பனைக்கு குவிப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி கேட்டு வியா பாரிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
    • அதன்படி 68 இடங்களில் தற்காலிக பட்டாசு க்கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி கேட்டு வியா பாரிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தீயணைப்புத்துறை ஆய்வு செய்து அனுமதி சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

    அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆன்லைனில் ஏராளமானோர் விண்ண ப்பம் செய்திருந்தனர். இதனை ஆய்வு செய்ய தீயணைப்புத் துறையின ருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தர விட்டனர். அதன்படி தீயணைப்புத் துறையினர் சம்மந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    போதுமான இடவசதி, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து பார்வையிட்ட அவர்கள் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்த னர். அதன்படி 68 இடங்க ளில் தற்காலிக பட்டாசு க்கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    • பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட தொடங்கி உள்ளன.
    • பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறை , செம்ப னார்கோயில், சீர்காழி, குத்தாலம், மங்க நல்லூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் 300க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட துவங்கியுள்ளன.

    இந்நிலையில் பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கடை உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் கலெக்டர் மகா பாரதி தலைமையில் மயிலா டுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி.மீனா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    தொட ர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் மகா பாரதி பட்டாசு கடைகளில்உரிய பாதுகாப்பு நடவடி க்கை களை மேற்கொள்ள வேண்டும் எனஅறிவுறு த்தினர்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பட்டாசு கடை உரிமை யாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் மயிலாடுதுறை தாசில்தார் சபிதா, தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
    • அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

    சேலம்:

    சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களைத் தவிர்த்து, வெடிபொருள் சட்டமும் விதிகளும், 1884 மற்றும் வெடிபொருள் சட்டம் 2008–ன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் தலைமையில் தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு நகரப்பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    கிருஷ்ணகிரி, விருநகர் மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தை தொடர்ந்து, வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் இதர வெடி மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்திடவும், வெடி மருந்து உரிமம் பெற்ற இடங்களில் முறையான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்திடவும், மாநில, மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இக்குழுக்களானது தீ தடுப்பு மற்றும் தொழில் பாதுகாப்பினை உறுதி செய்யும் நடவடிக்கைகளை கண்காணிக்கும். மேற்படி அரசாணையின்படி ஈரோடு மாவட்டதில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வெடி மருந்து உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் உரிமதாரர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்று வதை உறுதி செய்திடவும், வெடி மருந்து உரிமம் பெற்ற இடங்களில் முறை யான பாதுகாப்பு அம்ச ங்களை உறுதிசெய்தி டவும், வருவாய் துறை, காவல்து றை, தீயணைப்பு துறை மற்றும் தொழிற்பாது காப்புதுறை அலுவலர்களை உள்ள டக்கிய தணிக்கை குழு வருவாய் கோட்டா ட்சியரின் மேற்பா ர்வை யின்கீழ் தாசில்தார் தலை மையில் 10 வட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தணிக்கை குழுவா னது அந்தந்த வட்டங்களில் உள்ள வாணம் மத்தாப்பு தயாரிப்பு நிறுவனங்கள், நிரந்தரமாக, தற்காலிக பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றை தணிக்கை செய்யும்.

    நேற்று கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டஅலுவலர் தலைமையிலான குழுவினர் கோபிசெட்டிபாளையம் கோட்டத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் நகரப்பகுதி, உக்கரம், மற்றும் கோபி செட்டிபாளையம் நகர ப்பகுதிகளிலும், ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான குழுவினர் ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட வீரப்பன்சத்திரம், பளையபாளையம், ஈரோடு நகரப்பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அரசு விதியின்படி செயல்படாத கடைகளின் உரிமையாளர்கள், உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் உரிமத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ள அளவினைவிட அதிகமாக பட்டாசு இருப்பு வைத்து ள்ளவர்கள் மீதுவெடி பொருள் சட்டம், 1884 மற்று ம் வெடிபொருள் விதிகள், 2008-ன்படி கடும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.

    • கலெக்டர் தகவல்
    • இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அதாவது, பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் பாஸ்போர்ட் போட்டோ ஆதார் அட்டை, உரிம கட்டணம் ரூ.500 (அரசு கருவூலத்தில் செலுத்தும் சீட்டு மூலம்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்த கட்டிடமாக இருந்தால் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் அல்லது கட்டிட திட்ட அனுமதி (ஏ4 அளவில்), விண்ணப்பங்களை வரும் 24-ந் தேதி வரை மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    அதன் பிறகு பெறப்படும். விண்ணப்பங்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
    • பட்டாசு கடை நடத்தும் இடம் பாதுகாப்பானதாக இருத்தல் அவசியம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை மற்றும் பிற பண்டிகைகள், திருவிழா காலங்களில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விரும்புவோா் வெடிபொருள் சட்டம் 2008 விதி 84 - ன் கீழ் உரிய ஆவணங்கள் மூலம் இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் விண்ணப் பிக்கலாம். இந்த உரிமமானது வழங்கப் பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் வரை மட்டுமே செல்லத்தக்கதாகும்.

    படிவம் ஏ.இ.-5-ல் விண்ணப்பப் படிவம், உரிமக் கட்டணமாக ரூ.500 அரசு கருவூலத்தில் செலுத்திய செல்லான், கடையின் வரைபடம், புகைப்படம் - 2, வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்தப்பத்திரம், அதன் வீட்டு வரி ரசீது நகல், சொந்தக்கட்டிடம் எனில் வீட்டு வரி ரசீதின் நகல், நெல்லை துணை இயக்குநா் (சுகாதாரப் பணி) தடையின்மை சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசு கடை நடத்தும் இடம் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பானதாகவும் இருத்தல் அவசியம்.

    ஏற்கெனவே கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபா்கள் அதே இடத்தில் மீண்டும் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்தால், அதற்கான உரிமத்தையும் விண்ணப் பத்துடன் இணைத்து இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
    • வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் சப்-கலெக்டர் அமித்யிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மனு அளித்தார். மனுவில் வருகின்ற தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வ .உ. சி. திடலில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த நகராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இடம் ஆகும். வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது. பின்புறம் எண்ணை குேடான்கள் உள்ளது.

    இந்த இடத்தில் பட்டாசு கடை அமைக்க பொருத்தமான இடம் இல்லை. இந்த இடம் அதிகமாக போக்குவரத்து ஏற்படும் இடமாகும்.

    திண்டிவனத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ் அனைத்தும் இந்த வழியாக தான் செல்லும் பயணிகள் அதிகளவில் நின்று செல்லும் இடமாக இது உள்ளது. வ.உ.சி. திடலில் பின்புறம் 3 ஹோட்டல்கள் உள்ளன திடீரென ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    எனவே இந்த இடத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க அனுமதி தரக் கூடாது என இந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பட்டாசு கடைகள் அமைக்க 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டத்தின் கீழ், கீழ்க்கண்ட உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற வருகிற 30-ந் தேதிக்குள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மனு அளிக்க வேண்டும். அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் வருமாறு:-

    திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள், ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஸ்மார்ட் அட்டை), நகராட்சி , பேரூராட்சி, ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் புகைப்படம்.

    மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இந்த தேதிக்குள் கிடைக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். 30-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பங்கள் மீது 15ந் தேதிக்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டாசு கடை அமைக்கும்போது 50 மீட்டர் சுற்றளவுக்கு காலியிடம் இருக்க வேண்டும்.
    • கட்டிடத்தின் மேல் மாடியில் குடியிருப்பு மற்றும் பட்டாசு இருப்பு இருத்தல் கூடாது.

    கோவை,

    தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். தற்காலிக பட்டாசு உரிம த்தினை பெறுவத ற்கென தங்களது விண்ணப்ப த்தினை வரும் 30-ந் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    பட்டாசு கடைகள் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் குடியிருப்பு மற்றும் பட்டாசு இருப்பு இருத்தல் கூடாது.

    பட்டாசு கடையின் அருகில் மருத்து வமனைகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள், கட்டிடங்கள், டீக்கடை இருத்தல் கூடாது.பொதுமக்கள் கூடும் பகுதிகள், பஸ் நிறுத்தம், பஸ் நிலையங்கள் அருகில் பட்டாசு கடை அமைத்தல் கூடாது. பட்டாசு கடையின் கட்டிடத்தில் கண்டிப்பாக 2 வழிகள் இருக்க வேண்டும். அதில் அவசர காலவழி கடையின் வெளியே செல்லும்படி இருத்தல் வேண்டும். காலி இடத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்கும்போது 50 மீட்டர் சுற்றளவுக்கு காலியிடம் இருக்க வேண்டும்.திருமண மண்டபங்கள், அரங்கங்கள், சமுதாய கூடங்கள், கட்டிடங்களில் பட்டாசு கடை அமைக்க கூடாது. பட்டாசு உரிம கட்டணனம் ரூ.700-யை www.karuvoolam.tn.gov.\challan\echallan என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் மேற்குறிப்பிட்ட காலக்கெ டுவிற்கு பின்னர் வ ரப்பெறும் விண்ண ப்ப ங்களும், நிபந்தனை கள் கடைபி டிக்காத விண்ணப்ப ங்களும் நி ர்வாக காரணங்களால் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

    இந்த தகவலை கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

    ×