தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
Published on

சேலம்:

சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களைத் தவிர்த்து, வெடிபொருள் சட்டமும் விதிகளும், 1884 மற்றும் வெடிபொருள் சட்டம் 2008–ன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com