என் மலர்
சிவகங்கை
- நாலுகோட்டை அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டது.
- பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் தலைமையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
மேற்பார்வையாளர் பிரபா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் சக்தி, மகளிர் குழு உறுப்பினர்கள் மீனாட்சி, காளியம்மை, கனிமொழி, நேத்ரா, தமிழரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பெயர் ஒப்புதல் பெறப்பட்டது.
இங்குள்ள அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டது. வரவு-செலவு கணக்கு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
கழிவுநீர் செல்ல உறிஞ்சி குழி அமைக்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், மாசிலாமணி, பால்ரூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முறையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள முறையூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் என்.எம். சுரேஷ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், அடிப்படை கட்டமைப்பு-தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கே.வி.வி.டி. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிசைகள் கண்டறியப்பட்டு பயனாளிகளுக்கு வீடு கட்டித்தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாள்தோறும் சேரும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குமாறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை பயன்படுத்துமாறும் கிராம மக்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதில் சிங்கம்புணரி யூனியன் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் கதிரேசன் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுயநிதி குழுவினர், பணித்தள பொறுப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
- வாராப்பூர் கிராம சபை கூட்டம் நடந்தது.
- வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள கட்டையம்பட்டி பண்ணை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார்.
ஊராட்சியின் வரவு-செலவு விவரங்களை மக்களிடம் நேரடியாக துண்டு பிரசுரங்கள் மூலம் அனைவரிடமும் தலைவர் வழங்கினார். ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, குடிநீர், கிராம வளர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதமரின் மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டம், ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.
விவசாயத்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ,காவல்துறை அதிகாரிகள் , வருவாய்த்துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய பற்றாளர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
- மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது.
- வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்றில் பிரசித்தி பெற்ற வீர அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 11-ந்தேதிவரை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் இரவு பன வீர அழகர் என்ற நாமத்துடன் அழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாள் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பின்னர் வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.25 மணியில் இருந்து 7.25 மணி வரை நடைபெறுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) இரவு மானாமதுரை கிராமத்தார் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் பக்தர்கள் வீர அழகருடன் வைகைஆற்றில் நிலாசோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று முதல்நாள் நிகழ்ச்சி மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. நகராட்சி அலுவலகத்தில் வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- கன்னிகா பரமேசுவரி அக்னி பிரவேச தின வழிபாடு நடந்தது.
- தீப ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கன்னிகா பரமேசுவரி கோவிலில் அன்னை வாசவி அக்னி பிரவேசம் செய்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் மூலம் அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் கன்னிகா பரமேசுவரி நாம சகஸ்ர லட்சார்ச்சனை பெண்களால் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து தீப ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஆரிய வைசிய மகாஜன சபையின் தலைவர் முத்துலட்சுமணன் மற்றும் மகிளா சபாவினர் செய்திருந்தனர்.
- கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.
- ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள குட்டையன்பட்டி கூவனக் கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடந்தது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே திரளான கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்று மீன்களை அள்ளி செல்ல காத்திருந்தனர்.
கிராம பெரியவர்கள், கண்மாய் ஆயக்கட்டு தாரர்கள் அருகில் உள்ள அய்யனார் கோவிலில் வழிபாடுகளை முடித்து கண்மாய் கரையில் இருந்து வெள்ளை வீசி மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து காத்திருந்த கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர். கச்சா, பரி, ஊத்தா முதலிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.

அவர்களிடம் ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
நல்ல மழை பொழிந்து விவசாயம் பெருகவும், மக்களிடம் ஒற்றுமையை மேம்படுத்தவும், ஜாதி-மத பேதமின்றி அனைவரும் இலவசமாக மீன்பிடித்து செல்ல அமைக்கப்பட்டிருந்த இந்த மீன்பிடித் திருவிழா சமூக ஒற்றுமைக்கு குறிப்பிட்ட அம்சமாக விளங்கியது.
- தேவகோட்டை அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கினர்.
- தனி படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி 11-ந் தேதி அதிகாலையில் தாய் கனகம், மகள் வேலுமதி ஆகியோரை கொலை செய்து 60 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அருகில் படுத்திருந்த வேலுமதி மகன் மூவரசன் என்ற 13 வயது சிறுவனை மண்டையை உடைத்து காயப்படுத்தி விட்டு குற்றவாளிகள் தப்பினர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச்சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு சம்பந்தமாக நேரடி கண்காணிப்பில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 8 தனி படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது விசாரணை தீவிரமடைந்து முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கிருப்பதாக தெரிகிறது. அவர்களிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திருப்புவனத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பெரிய பேரூராட்சி ஆகும். இங்குள்ள வைகைஆற்றின் மற்றொரு கரையில் மடப்புரம் காளிஅம்மன் மற்றும் முன்னோர்கள் திதி கொடுத்து வழிபடும் புஷ்பவனேசுவரர் கோவில்கள் உள்ளன.
கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் திருப்புவனத்தை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். அடிக்கடி போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படும்.
தற்போது சாலைகளிலும், பஸ்நிறுத்தம் மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு-பகலாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி பலர் காயம டைந்துள்ளனர்.
சிலநேரங்களில் மாடுகளுக்கிடையே ஏற்படும் சண்டையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் மீது முட்டி மோதி ஏராளமான வாகனங்கள் சேதமடை கின்றன.
மாடுகள் நிற்பதை அறியாத வெளியூர் பயணிகள் அவை முட்டி காயமடைந்துள்ளனர். திருப்புவனத்திற்கு பஸ்நிலையம் இல்லாததால் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் சாலைகளில் திரியும் மாடுகளால் அச்சமடை கின்றனர்.
சாலையில் திரியும் மாடுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சிவகங்கை நகராட்சியில் ரூ.98 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் ஆய்வு செய்தார்.
- பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சியின் சார்பில் நகரின் மையப்பகு தியான அரண்மனை வாசலில் இருந்து வாரச் சந்தை வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற தாக இருந்து வந்தது. அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். 2 மற்றும் 3-வது வார்டு சி.பி.காலனி உள்ளிட்ட பகுதி களில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதனை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சியில் நகர மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகங்கை நகராட்சியை ஒரு முன்மாதிரி நகராட்சி யாக உருவாக்கிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த ஆய்வின்போது சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், ஆணையா ளர் (பொறுப்பு) பாண்டீஸ் வரி, நகர இளைஞர் அணி அமைப்பாளரும், மன்ற உறுப்பினருமான அயூப் கான், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயகாந்தன், வீரக்காளை, நகர துணை செயலாளர்கள் வீனஸ் ராமநாதன், ஆறு.சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப் பாளர் ராஜா அமுதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு செய்தார்.
- குழந்தைகள் நல காவல் அலுவலர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள குழந்தைகள் நேய வளாகத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் மதுசூதன் ரெட்டி உடனிருந்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை முற்றிலும் பாதுகாக்கும் வகையில் முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 கோவில் தலங்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளையார் கோவிலும் ஒன்றாகும்.
இன்றையதினம் காளையார்கோவில் வளாகத்திலும் இது தொடர்பாக கண்காணிப்பதற்கென, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டம் நடந்தது.
இதன் அடுத்த கட்டமாக, பஸ் நிலையம், ெரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மேற்கண்ட நடைமுறைகளை செயல்படுத்தவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் குழந்தைகள் நேய வளாகம் செயல்பட்டு வருகிறது.
இதில் 1098 எண்கள் மூலம் புகார்களின் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு அதற்கான முறையான தீர்வுகளும் காணப்பட்டு வருகிறது. வரும் முன் காப்போம் என்ற அடிப்படை யில் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அனைவரின் பங்களிப்பு இருக்கும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தை நல குழுத்தலைவர் சாந்தி, குழந்தைகள் நல காவல் அலுவலர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா தொடங்கியது.
- ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானசசஞ்சரே எனபாடி இறைவன் அம்பிகையை எந்த நேரமும் வழிபாடு செய்து ஆண்-பெண் தோற்றத்துடன் கூடிய மகான் சதசிவ பிரம்மேந்திராள். இவரது ஜீவசமாதி கரூர் அருகே நெரூரிலும், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் உள்ளது. இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆண்டு தோறும் சதாசிவ பிரம்மேந்திராள் இசைஆராதனை விழா மானாமதுரையில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா இன்று காலை தொடங்கியது. இதில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் நினைவை போற்றும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.
முதல் நாள் விழா மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மகாலில் காலை முதல் வேதபாராயணம், உஞ்சவ்விருத்தி, தீபாராதனை மற்றும் வாய்ப்பாட்டு, பூஜைகள், புல்லாங்குழல், பாட்டு நடந்தது. வீணை, வயலின் போன்ற இசை கச்சேரிகளை கர்நாடக இசைக் கலைஞர்கள் நடத்தினர். மாலையில் இசைக் கலைஞர்களுக்கு ஆராதனை கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. மறுநாள் (30-ந் தேதி) ஆனந்த வல்லி அம்மன் கோவிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் பூஜை, விருத்தி, குரு உஞ்சவ் விருத்தி, அஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேசுவர பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- காரைக்குடி சரஸ்வதி ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
- ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
காரைக்குடி
காரைக்குடி முத்துப் பட்டினம் சரஸ்வதி ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியை ஜானகி தேவி வரவேற்றார். தலைமை ஆசிரியை மீனாள் தலைமை தாங்கினார்.
பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் பிரீத்தா, துணை தலைவர் அஜீஸா முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட அளவிலான ரீடிங் மராத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற இந்த பள்ளியின் முன்னாள் மாணவி மதிசாய்ஸ்ரீ பங்கேற்று பேசினார். இவர் மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி ஊக்கத்தொகை ரூ.48ஆயிரம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் மாணவ மாணவிகளின் நடனம், மாறுவேடப் போட்டி உள்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






