என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிபிரவேசம்"

    • கன்னிகா பரமேசுவரி அக்னி பிரவேச தின வழிபாடு நடந்தது.
    • தீப ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கன்னிகா பரமேசுவரி கோவிலில் அன்னை வாசவி அக்னி பிரவேசம் செய்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் மூலம் அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மாலையில் கன்னிகா பரமேசுவரி நாம சகஸ்ர லட்சார்ச்சனை பெண்களால் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து தீப ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஆரிய வைசிய மகாஜன சபையின் தலைவர் முத்துலட்சுமணன் மற்றும் மகிளா சபாவினர் செய்திருந்தனர்.

    ×