search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிங்கம்புணரி அருகே சமூக ஒற்றுமையை பறைசாற்றிய மீன்பிடி திருவிழா- திரளான கிராம மக்கள் பங்கேற்பு
    X

    சிங்கம்புணரி அருகே சமூக ஒற்றுமையை பறைசாற்றிய மீன்பிடி திருவிழா- திரளான கிராம மக்கள் பங்கேற்பு

    • கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.
    • ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள குட்டையன்பட்டி கூவனக் கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடந்தது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே திரளான கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்று மீன்களை அள்ளி செல்ல காத்திருந்தனர்.

    கிராம பெரியவர்கள், கண்மாய் ஆயக்கட்டு தாரர்கள் அருகில் உள்ள அய்யனார் கோவிலில் வழிபாடுகளை முடித்து கண்மாய் கரையில் இருந்து வெள்ளை வீசி மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து காத்திருந்த கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர். கச்சா, பரி, ஊத்தா முதலிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.

    அவர்களிடம் ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    நல்ல மழை பொழிந்து விவசாயம் பெருகவும், மக்களிடம் ஒற்றுமையை மேம்படுத்தவும், ஜாதி-மத பேதமின்றி அனைவரும் இலவசமாக மீன்பிடித்து செல்ல அமைக்கப்பட்டிருந்த இந்த மீன்பிடித் திருவிழா சமூக ஒற்றுமைக்கு குறிப்பிட்ட அம்சமாக விளங்கியது.

    Next Story
    ×