search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Child Protection"

    • தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகள் நல காவல் அலுவலர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள குழந்தைகள் நேய வளாகத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் மதுசூதன் ரெட்டி உடனிருந்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை முற்றிலும் பாதுகாக்கும் வகையில் முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 கோவில் தலங்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளையார் கோவிலும் ஒன்றாகும்.

    இன்றையதினம் காளையார்கோவில் வளாகத்திலும் இது தொடர்பாக கண்காணிப்பதற்கென, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டம் நடந்தது.

    இதன் அடுத்த கட்டமாக, பஸ் நிலையம், ெரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மேற்கண்ட நடைமுறைகளை செயல்படுத்தவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் குழந்தைகள் நேய வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இதில் 1098 எண்கள் மூலம் புகார்களின் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு அதற்கான முறையான தீர்வுகளும் காணப்பட்டு வருகிறது. வரும் முன் காப்போம் என்ற அடிப்படை யில் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அனைவரின் பங்களிப்பு இருக்கும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தை நல குழுத்தலைவர் சாந்தி, குழந்தைகள் நல காவல் அலுவலர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×