என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • குன்றக்குடியில் குருபூஜை விழா நடந்தது.
    • குருமூர்த்தி வழிபாடு, மாகேசுவர பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 45-வது குருமகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 28-ம் ஆண்டு குருபூஜை விழா குன்றக்குடி ஆதீன மடத்தில் நடந்தது. பின்னர் நடந்த விருது வழங்கும் விழாவில் சேதுபதி வரவேற்றார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் விருதை ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு பொன்னம்பல அடிகளார் பேசினார்.

    அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி வாழ்த்துரை வழங்கினார்.மயிலை பொம்மபுர ஆதீனம் சிவஞனபாலய சுவாமிகள், துளாவூர் ஆதீனம், கோவிலூர் மடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.குன்றக்குடி ஆதீனத்தின் கல்வி நிலையங்களில் பணியற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    45-வது குருமகாசந்நிதானத்தின் குருமூர்த்தி வழிபாடு, மாகேசுவர பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

    • மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் லதாஅண்ணாதுரை தலைமையில் நடந்தது. ஆனையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்ட அலுவலர் வரவு-செலவு மற்றும் கூட்ட பொருள் பற்றி வாசித்தார். கீழபசலை ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் பேசுகையில், 15-ந்தேதி யூனியன் அலுவலகத்தில் டெண்டர் நடைபெற்றுள்ளது. இதுபற்றி குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அதிகாரிகளுக்கு தெரியாத திட்டங்கள் இல்லை.

    ஆனால் ஆனையாளர் இங்கு நடைபெறும் டெண்டர் பற்றி தெரியாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த டெண்டர் இது என்று கூறுகிறார். இங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி நடைபெறும்? ஒன்றியகுழு உறுப்பினர்களிடம் தெரியாது என்று கூறக்கூடாது. எங்கள் ஊரில் நடைபெறும் பள்ளி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கூட்டுகுடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். 

    • பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
    • கொடியிறக்கத்துடன் ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் திருவிழா நிறைவடைந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம்

    25-ந் தேதி தொடங்கியது. தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் பிரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளினர். கடந்த 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந் தேதி தேரோட்டம் நடந்தது.

    கனமழையால் சித்திரை திருவிழாவின் போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றது. தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் அஸ்திர தேவர் புறப்பாடாகி, கோவிலுக்கு எதிரே உள்ள வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

    இதைத் தொடர்ந்து அஸ்திரத்தேவருக்கு வைகை நீரில் பல வகை அபி ஷேகங்கள் நடத்தி, தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

    தீர்த்தவாரி உற்சவம் வழக்கமாக கோவிலில் நடைபெறும் என்றாலும் பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து சாந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. கொடியிறக்கத்துடன் ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் திருவிழா நிறைவடைந்தது.

    • ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
    • காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. சிவகங்கை , திருப்பத்தூர், பொன்னமராவதி, கீழச்சிவல்பட்டி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 208 காளைகளும், 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

    போட்டியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். இந்த போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    இதில் காளைகள் வீரர்களை தூக்கி வீசியது. காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை 24 அரை கிராமமக்கள் செய்திருந்தனர். கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • மானாமதுரை வைகையாற்றில் இறங்கிய வீர அழகர்
    • கோவிந்தா கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோம நாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10நாட்கள் சித்திரை திருவிழா நடை பெறும்.

    மதுரையில் நடைபெறு வது போல இங்கும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆனந்தவல்லி -சோமநாதர் கோவிலில் வைகையாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    வீர அழகர்கோவிலில் உள்ள மண்டகபடியில் கள்ளழகர் திருக்கோலத் துடன் சுந்தரராஜபெருமாள் பூப்பல்லக்கில் எழுந்தரு ளினார். நள்ளிர வில் எதிர்சேவை நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தியாக விநோத பெருமாள் கோவிலில் இருந்து வீர அழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு அணிந்து அப்பன் பெருமாள் கோவில் மற்றும் ரதவீதிகளில் வலம் வந்து ஆனந்தவல்லி, சோம நாதர் கோவில் முன்புள்ள வைகையாற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

    திருவிழாவை காண வைகையாற்றங்கரை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் திருக்கண் சாத்தி வீர அழகரை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீர அழகர் கோவிலில் வருகிற 10-ந்தேதி வரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது.

    • வேலியில் சிக்கி புள்ளிமான் பலியானது.
    • கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் இரை தேடி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள நாய்கள் துரத்தின. இதனால் பயந்து ஓடிய புள்ளிமான் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி முள்ளு கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலர்கள் புள்ளிமான் உடலை கைப்பற்றி கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.

    • திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மீண்டும் இன்று மாலை தேரோட்டம் நடந்தது.
    • பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்ததால் பாதி வழியிலேயே தேர் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தேரோட்டம் நடைபெறுகிறது.கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக தேர் வந்து நிலையை வந்தடைகிறது. நாளை (6-ந்தேதி) இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் கோவில் கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேவகோட்டை அருகே குறைந்த விலைக்கு நகைகள் அடகு வைக்கப்பட்டது.
    • அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தாய், மகளை கொலை செய்து 60 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை யடித்தனர். இவர்களது அருகில் தூங்கிய வேலுமதி மகன் மூவரசன் என்ற 13 வயது சிறுவனின் மண்டையை உடைத்து படுகாயப்படுத்தி விட்டு குற்றவாளிகள் தப்பி விட்டனர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச்சம்பவம் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரையும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த வழக்கு சம்பந்தமாக தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

    இந்த வழக்கில் ெதாடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது விசாரணை தீவிரமடைந்து முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கி இருப்ப தாக தெரிகிறது. எனவே போலீசார் அவர்கள் மீது ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருடப்பட்ட நகைகள் குறித்து தேவகோட்டை நகை கடை பஜாரில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தனிப்படையினர் விசா ரணை நடத்தினர். அதில் இந்த வழக்கில் முக்கிய நபர் மூலமாக நகைக்க டைகளில் பல லட்சம் மதிப்பிலான நகை களை குறைந்த விலைக்கு அடகு வைத்தது தெரியவந்தது. அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை 

    • தேவகோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
    • நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே உள்ள நாஞ்சி வயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது34), எலனாப்பட்டியை சேர்ந்தவர் நவீன் (22). இவர்கள் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தனர். அவர்கள் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியூர் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயபால் வரும் வழியில் இறந்து விட்டார். நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • சிவகங்கையில் குளியல் தொட்டியை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி 11-வது வார்டு மன்னர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. அதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் (பொறுப்பு) பாண்டிசுவரி, கவுன்சிலர்கள் ராஜா, ஆயுப்கான், மகேஷ், ராபர்ட், தாமு, கார்த்திகேயன், ராமதாஸ், கிருஷ்ணகுமார், ஒப்பந்ததாரர் முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், அவைத் தலைவர் பாண்டி, நகரதுணைசெயலாளர் மோகன்,சேதுபதி, சரவணன், முருகன்,சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக புதிய இயக்குநராக ரமேஷா பதவியேற்றார்.
    • வேதிவினைகள் எவ்வாறு அடுக்கு எதிர்மின் வாயின் மின்தேக்கு திறனை பாதிக்கிறது என்பதை முதன் முதலில் நிலைநாட்டினார்.

    காரைக்குடி

    மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்-சிக்ரி) புதிய இயக்குநராக ரமேஷா பதவியேற்றார். இவர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் சிறந்த முனைவர் ஆய்வறிக்கைக்கான கெ. பி.ஆபிரகாம் பதக்கத்தை பெற்றவர். இவர் கார்னெட் எனும் திடமின்பகுபொருள் கொண்டு உருவாக்கப்பட்ட திண்ம-நிலை லித்தியம் அயனி மின்கலன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். மேலும், மீளக்கூடிய எதிர்மின்ம ஒடுக்க ஏற்ற வேதிவினைகள் எவ்வாறு அடுக்கு எதிர்மின் வாயின் மின்தேக்கு திறனை பாதிக்கிறது என்பதை முதன் முதலில் நிலைநாட்டினார்.

    • காளையார்கோவிலில் அறிவியல் இயக்க கொண்டாட்டம் நடந்தது.
    • செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.

    காளையார்கோவில்

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த திருவிழா மண்டல, ஒன்றிய அளவில் மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது.

    ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 350 இடங்களில் இது நடைபெற உள்ளது.

    அதன் தொடக்கமாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவின் பேரில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சேவல் புஞ்சை நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயூ தலைமையில் ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கஸ்தூரிபாய் முன்னிலையில் நடந்தது.

    அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஆரோக்கியசாமி. ஆயிரம் ஆயிரம் அறிவியல் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கினார். இதில் அந்த பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.

    ×