இலவச சேவை மையத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

இலவச சேவை மையத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இலவச சேவை மையத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் திறப்பு விழா நடந்தது.இதை மானாமதுரை எம்.எல்.ஏ.-முன்னாள் அமைச்சர் தமிழரசி திறந்துவைத்து, கணினியை இயக்கி வைத்தார். பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

தொகுதியில் உள்ள குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், தி.மு.க. நிர்வாகிகள் நெட்டூர் அய்யா சாமி, வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com