என் மலர்
சிவகங்கை
- பிளஸ் 2 பொதுத் தேர்வில் காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளி சாதனை படைத்தது.
- சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் பாராட்டினர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியின் மாணவி கீர்த்தனா 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவன் பழனியப்பன் 582 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரூவாந்திகா 575 மதிப்பெண்களுடன் 3-ம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் ராஜமாணிக்கம், தாளாளர் நிவேதிதா, இயக்குனர் ஞானகுரு, முதல்வர் சசிகலா பாராட்டினர்.
- புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
- சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த பள்ளியின் மாணவி காவியதர்ஷினி 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி சுபஸ்ரீ 576 மதிப் பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரவின் ரஸ்மிதா 569 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள் ளார். கணிப்பொறியியல் பாடத்தில் 6 பரும், அக்கவுண்டன்சியில் 4 பேரும், காமர்ஸ்சில் 3 பேரும், கணிப்பொறி அறிவியலில் ஒரு மாணவியும் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
- காரைக்குடி புதுவயல் வித்யாகிரி கல்வி குழும பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
காரைக்குடி
மார்ச் 2023 - ல் நடை பெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் புதுவயலில் உள்ள வித்யாகிரி கல்வி குழுமத்தின் மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 188 மதிப்பெண்கள் மற்றும் கணிப்பொறி பயன்பாட்டி யலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி அலமுப்பிரியா 582 மதிப்பெண்கள் பெற்றுள் ளார். மாணவன் கேசவ நிவேதிதன் 581 மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.
இவர் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் 100 மதிப் பெண்களும் பெற்று ள்ளார். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி குழுத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமி நாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண் சுந்தர், வித்யா கிரி பள்ளிமுதல்வர் ஹேமமாலினி சுவாமி நாதன், புதுவயல் பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.
- சிவகங்கை அருகே இலவச கணினி மையம் திறப்பு விழா நடந்தது.
- கிளாசிக் பவுண்டேசன் சார்பில் சிவராமன்செட்டியார்-தெய்வானைஆச்சி நினைவாக தொடங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள பி.அழகாபுரி கிராமத்தில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கணினி மையம் திறப்பு விழா நடந்தது. கிளாசிக் பவுண்டேசன் சார்பில் சிவராமன்செட்டியார்-தெய்வானைஆச்சி நினைவாக தொடங்கப்பட்ட இந்த கணினி மையம் திறப்பு விழாவிற்கு கிளாசிக் ஆதப்பன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.எல்.மணிவாசகம், மீனாட்சிசுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளித்தலைவர் வெள்ளையன்செட்டியார், ஆர்.எம்.மெட்ரிக்பள்ளி தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கணினி மையத்தை சிவ.ராமநாதன் திறந்து வைத்தார். ஞானம் ஆதப்பன், மீனாள் ராமநாதன், ஐஸ்வர்யா, இந்துமதிபாலா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
பேராசிரியர்கள் சொக்கலிங்கம் நா.சுப்பிரமணியன், தேனப்பன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் அழகுமணிகண்டன், சுரேஷ், காசிநகர சத்திர துணைத் தலைவர் மாணிக்கம்செட்டியார், ஏ.எல்.வெங்கடாசலம், முருகப்பன் ஆகியோர் பேசினர்.
இந்த மையத்தில் கணினி பயில்வதுடன் சான்றிதழ் படிப்புகளான டி.ஓ.ஏ., சி.ஓ.ஏ, டி.சி.ஏ., டி.ஓ.எம்.டேலி, இ.ஆர்.பி, ஜி.எஸ்.டி, போன்றவற்றிற்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது. முன்னதாக ஏ.எல்.ஞானவேல் வரவேற்றார். முடிவில் கருப்பையா ராமநாதன் நன்றி கூறினார்.
- காரைக்குடியில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி யாற்றி வருபவர் லெனின். இவர் அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது அப்துல் கனி உள்பட 4 பேர் பெண் போலீஸ் நிஷாந்தினி, அமலரூபம் ஆகியோரிடம் போக்சோ வழக்கு தொடர் பாக வந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடாது என்று வற்பு றுத்தி கொண்டிருப்பதை பார்த்தார்.
இதனை கண்ட அவர் பெண் போலீசாரிடம் இவ்வளவு கடுமையாக பேசக்கூடாது என்று 4 பேரிடமும் கூறி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது பற்றி லெனின் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து அப்துல் கனி என்ப வரை கைது செய்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இலவச சேவை மையத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் திறப்பு விழா நடந்தது.இதை மானாமதுரை எம்.எல்.ஏ.-முன்னாள் அமைச்சர் தமிழரசி திறந்துவைத்து, கணினியை இயக்கி வைத்தார். பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
தொகுதியில் உள்ள குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், தி.மு.க. நிர்வாகிகள் நெட்டூர் அய்யா சாமி, வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
- பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
சிங்கம்புணரி
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பொன்னமராவதிக்கு 45 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு வந்தது.
இந்த பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா மதியாணி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கருப்பையா (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல்நிலையம் அருகே வரும்போது டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அவர் பஸ்சை மெதுவாக இயக்கி வந்து சிங்கம்புணரி பஸ் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தினார். பின்னர் கண்டக்டரிடம் நெஞ்சு வலிக்கிறது. அரசு மருத்துவ மனைக்கு போகலாம் என கூறிய டிரைவர் சிறிது நேரத்தில் ஓட்டுநர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த பயணிகள் ஆட்டோவை வரவழைத்து அருகில் உள்ள சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் டிைரவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும் சாமர்த்தியமாக பஸ்சை மெதுவாக இயக்கி பயனிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர் கருப்பையாவிற்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- கியூ.ஆர்.கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி 3 மாதத்தில் செயல்படுத்தப்படும்.
- அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு 3-ம் ஆண்டில் அடிெயடுத்து வைத்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையி லும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மக்களுக்கு தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.
ரேஷன் கடை களில் கியூ.ஆர்.கோடு மூலமும் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.முதல் கட்டமாக சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
பழங்காலத்தில் சிறுதானியங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மறந்து விட்டனர். ஆனாலும் இப்போது டாக்டர்கள் அறிவுரையின் பேரில் மீண்டும் சிறுதானியத்தின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி உள்ளது. இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்கும் திட்டம் தற்போது சோதனை முறையில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தில் சிறுதானியங்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்துதான் சிறுதானியங்களை வரவழைக்கிறோம்.
எனவே இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவு படுத்துவதற்கு தேவையான அளவு சிறுதானியங்கள் கையிருப்பு வேண்டும். அதன் பின்னர்தான் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்த முடியும். எதிர்காலத்தில் இந்த திட்டம் அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
- பால்குடம் எடுத்து வந்து கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வணிகர் நல சங்கத்தின் சார்பாக 82-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் சித்தர் முத்துவடுகநாதருக்கு அபிஷேகம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பெரியகடை வீதி, நான்கு முனை சந்திப்பு சாலை, வேங்கைபட்டி சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க தலைவர் வீரபாண்டியன், செயலாளர் வாசு, திருமாறன், பொருளாளர் பாப்பா கணேசன், சரவணன், பாலன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தததை யொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று 365 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 93 ஆயிரத்து 372 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை கடந்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி சென்று இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதி ரியான முதலமைச்சராக, மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்ப டையில் மக்களாட்சியில் 3-வது ஆண்டை தொடங்கி யிருக்கும் முதல்- அமைச்சருக்கு, சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாக த்தால் சிறப்பான நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு, பிற மாவட்டங்களுக்கும் முன்மாதிரியான மாவட்டமாக சிவகங்கை திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு, மேலாண்மை இயக்குநர் (மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், துணைத் தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில் குமார், ஆரோக்கிய சாந்தா ராணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
- போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தட்டட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொரட்டி கிராமத்தில் ஸ்ரீ சிந்தாமணி அம்மன் கோவில் பூக்குழி மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அரசு அனுமதியுடன் முதன் முதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
இதில் சிவகங்கை , திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 250 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் சீறி பாய்ந்த காளைகளை, காளையர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.
காயமடைந்த வீரர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மேல் சிகிச்சைக்காக ஒரு நபரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும் மற்றொரு நபரை தனியார் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கொரட்டி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், கிராம தலைவர் சண்முகம் அம்பலம், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானோர் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.
நாச்சியாபுரம் மற்றும் திருப்பத்தூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
- சிவகங்கை அருகே தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
- சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லா கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்புவனம் சமயபுரத்தாள் சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார். சிவகங்கை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் தேவராஜ், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்து விளக்கினார். சிவகங்கை, மகளிர் திட்ட உதவி மேலாளர் ராஜ்குமார், பொருட்களை சந்தைப்படுத்துதல் உத்தி குறித்து பேசினார். இதில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 75 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பழைய மாணவர்-தொழில்முனைவோர் ராமர் நன்றி கூறினார்.






