பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம்

பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள், 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மின்கலத்தினால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் (Battery Operated Wheel Chair) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள் மற்றும் 2 கால்களும் செயலிழந்த

60 வயதிற்குட்டபட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதிற்குட்டபட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட குறைபாடுகள் உடைய மாற்றுத் திறனா ளிகள் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்,

மேலும் கல்வி பயிலும், பணிபுரியும், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட சான்றுகளுடன் வருகிற

16-ந் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விண்ணப்பித்தும் பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com