என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம்
By
மாலை மலர்9 May 2023 12:18 PM IST

- சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பூஜைகள் நடந்தன. அங்குள்ள காசி குருபகவானுக்கு குருபெயர்ச்சி ஹோமம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக திரளான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வழிபாடு செய்தனர். பெரிய நாச்சி அம்மனுக்கு 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வானவேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள ராஜகணபதி, செந்தில் ஆண்டவர் காசிவிஸ்வநாதர், துர்க்கை காளி, காசிஅனுமான், பைரவர், சித்தர் முத்துவடுகநாதர், நவகிரகங்கள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
Next Story
×
X