கமுதி அருகே டிரான்ஸ்பார்மர் மீது மோதிய சுற்றுலா பஸ் 41 பேர் காயம்

விபத்து குறித்து தகவல் அறிந்த கமுதி மற்றும் அபிராமம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 108 வாகனம், கமுதி தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தன.அபிராமம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கமுதி அருகே டிரான்ஸ்பார்மர் மீது மோதிய சுற்றுலா பஸ் 41 பேர் காயம்
Published on

பசும்பொன்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதை சுற்றி உள்ள 60 பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலுக்கு சுற்றுலா பஸ்சில் சென்றனர்.

அங்கு சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவு மானாமதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அபிராமத்தை அடுத்துள்ள முத்தாதிபுரம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது.

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய வேகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 13 ஆண்கள், 8 சிறுவர்-சிறுமிகள் என மொத்தம் 41 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கமுதி மற்றும் அபிராமம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 108 வாகனம், கமுதி தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தன.

அபிராமம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பஸ் டிரைவர் செல்லம்(56) கால் முறிந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், சந்தீப்வர்ஷன் (13) என்ற சிறுவன் தலையில் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்து வமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்த மீதமுள்ள 39 பேரில் சிலர் சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com