என் மலர்
நீங்கள் தேடியது "Kurupuija ceremony"
- குன்றக்குடியில் குருபூஜை விழா நடந்தது.
- குருமூர்த்தி வழிபாடு, மாகேசுவர பூஜையுடன் விழா நிறைவடைந்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 45-வது குருமகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 28-ம் ஆண்டு குருபூஜை விழா குன்றக்குடி ஆதீன மடத்தில் நடந்தது. பின்னர் நடந்த விருது வழங்கும் விழாவில் சேதுபதி வரவேற்றார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் விருதை ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு பொன்னம்பல அடிகளார் பேசினார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி வாழ்த்துரை வழங்கினார்.மயிலை பொம்மபுர ஆதீனம் சிவஞனபாலய சுவாமிகள், துளாவூர் ஆதீனம், கோவிலூர் மடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.குன்றக்குடி ஆதீனத்தின் கல்வி நிலையங்களில் பணியற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
45-வது குருமகாசந்நிதானத்தின் குருமூர்த்தி வழிபாடு, மாகேசுவர பூஜையுடன் விழா நிறைவடைந்தது.






