என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு. காயம்"

    • திருப்பத்தூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
    • போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தட்டட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொரட்டி கிராமத்தில் ஸ்ரீ சிந்தாமணி அம்மன் கோவில் பூக்குழி மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அரசு அனுமதியுடன் முதன் முதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

    இதில் சிவகங்கை , திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 250 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் சீறி பாய்ந்த காளைகளை, காளையர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    காயமடைந்த வீரர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மேல் சிகிச்சைக்காக ஒரு நபரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும் மற்றொரு நபரை தனியார் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கொரட்டி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், கிராம தலைவர் சண்முகம் அம்பலம், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானோர் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

    நாச்சியாபுரம் மற்றும் திருப்பத்தூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    ×