தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்

சிவகங்கை அருகே தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார்.
தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லா கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்புவனம் சமயபுரத்தாள் சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார். சிவகங்கை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் தேவராஜ், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்து விளக்கினார். சிவகங்கை, மகளிர் திட்ட உதவி மேலாளர் ராஜ்குமார், பொருட்களை சந்தைப்படுத்துதல் உத்தி குறித்து பேசினார். இதில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 75 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பழைய மாணவர்-தொழில்முனைவோர் ராமர் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com