என் மலர்tooltip icon

    சிவகங்கை

    100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் கிராம மக்களை இணையதள சேவை முடங்கி உள்ளதாக கூறி திருப்பி அனுப்புகின்றனர் சிவகங்கை எம்.எல்.ஏ.புகார் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதன்  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அது குறித்த நடவடிக்கை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். 

    அதன் ஒரு பகுதியாக சாத்தரசன்கோட்டை அருகே உள்ள குருந்தங்குளம், மருதங்குடி ஆகிய பகுதிகளில்  கிராம மக்களை  சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஒரு ஆண்டாக சிவகங்கை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. என்பதாலேயே ஆளுங்கட்சியால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு நல திட்டங்கள் கூட வழங்கப்படவில்லை.  

    சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிவகங்கை தொகுதிக்கு சட்டக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை   வைத்த போது அந்த கல்லூரியை ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக்சிதம்பரம் கோரிக்கை வைத்ததால் காரைக்குடி தொகுதிக்கு அறிவிக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
       
    மேலும் கடந்த ஓரு ஆண்டுகளில் முறையாக சாலை வசதிகளோ,   விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரமோ முறையாக வழங்கப்படவில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் கிராம மக்களை இணையதள சேவை முடங்கியுள்ளதாக கூறி வேலை தராமல் திரும்பி அனுப்பி வருகின்றனர். 
     
    இது குறித்த கோரிக்கைகளே அதிகளவில் பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தனர்.மேலும் சிவகங்கை தொகுதி இதுபோல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் தொகுதி மக்களை திரட்டி பெரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படும்.  

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    சிவகங்கை


    சிவகங்கை  சுப்பிரமணியராஜா தெருவை சேர்ந்த  பொன்னாண்டி மகன் கருப்பையா. இவரது வீட்டில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் 3 வருடத்திற்கு ரூ. 3 லட்சம் கொடுத்து ஒத்திக்கு குடியிருந்து வந்தார். 

    ஒத்தி காலம் முடிவடைந்தவுடன் வீட்டின் உரிமையாளரிடம் ஆசிரியை பணத்தை கேட்டபோது ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என வீட்டின் உரிமையாளர் கூறினார். 

    இதை ஏற்க மறுத்த ஆசிரியையை வேல் கம்பால் கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில் சிவகங்கை டவுன் போலீசார்  வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தினர். 

    கொலை மிரட்டல் விடுத்த  கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருக்கோஷ்டியூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து ரூ. 1 லட்சம் உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கலப்படமான டீத்தூள், கலர் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள், குட்கா உள்ளிட்டவைகளை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகனுக்கு தகவல் கிடைத்தது. 

     இதனையடுத்து  திருக்கோஷ்டியூர் பகுதிகளில் உள்ள மளிகை கடை, உணவகங்கள், பெட்டிக்கடை, பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. 

    அப்போது  ரூ.1 லட்சம் மதிப்பிலான விற்பனை செய்யப்பட்ட உணவு பொருட்கள், கலப்பட டீ தூள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு   பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதில் சுமார் 100 கிலோ டீத்தூள், 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  பெட்டிக்கடையில் பான்ம சாலா விற்கப்பட்டதையும் கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு அலுவலர்  அவற்றையும் பறிமுதல் செய்தார். மேலும்  மளிகை கடைக்காரர் மற்றும் அந்த பகுதி மக்கள் மத்தியில் போலி டீத்தூளை கண்டுபிடிக்கும் முறையினை செய்து காண்பித்தார். 

    இந்த நிகழ்வின் போது உணவு பாதுகாப்புதுறை உதவியாளர்கள் மாணிக்கம், மன்சூர், ஆரிப் ஆகியோர்   இருந்தனர்.

    இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகின்றன.

    கீழடியில் 5 குழிகளும். கொந்தகை மற்றும் அகரத்தில் தலா 2 குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் இந்த ஆய்வில் கீழடியில் 2 மெகா சைஸ் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

    மேலும் சில நாட்களுக்கு முன்பு பழங்காலத்தில் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய வட்ட வடிவிலான சில்லு வட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து தற்போது அந்த இடத்தில் இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    2600 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை காய்ச்சி ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்திருக்கலாம் என்றும், கீழடியில் இரும்பை உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் கருதப்படுகிறது.

    6-ம் கட்ட அகழாய்வின் போது இரும்பு ஆயுதம், குத்துவாள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. எனவே 2600 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் அகழாய்வின் போது மேலும் பல உறுதியான ஆதாரம் வெளிப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி 24 -ந் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை வைகை ஆற்றில் குடிநீர் திட்டங்களுக்கும், பாசனக் கிணறுகளுக்கும் உலை வைக்கும் வகையில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து  கட்சியினர், விவசாயிகள் சங்கங்கள், கிராம மக்கள் உள்ளடக்கிய போராட்டக் குழுவினர் வருகிற மே 24-ந் தேதி (செவ்வாய்கிழமை) மானாமதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். 

    இதற்கிடையில் சிவகங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேசிய கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஆனால் குவாரி செயல்படுவது  உறுதி என தெரிவித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து மறியல் போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மானாமதுரையில்  நடந்தது. 

    இதில் அனைத்து   கட்சியினர், விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மானாமதுரையில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக கலெக்டர் தெரிவித்த தகவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

    அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மானாமதுரை வைகையாற்றில் மணல் குவாரி அமைப்பதை  எதிர்த்தும், அதற்கான உத்தரவை கலெக்டர் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திட்டமிட்டபடி மானாமதுரையில் வருகிற 24ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதுரை - ராமேசுவரம் சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். 

    மேலும் இந்த போராட்டத்தை விளக்கி பிரசாரம் செய்வது, மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு கோருவது, மானாமதுரை வர்த்தகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்பது என தீர்மானிக்கப்பட்டது.

    நேற்றுமாலை  போராட்ட குழுவினர் சிவகங்கை  மாவட்ட வணிகர்சங்க பேரமைப்பு  தலைவர் பாலகுருசாமி முன்னிலையில் வர்த்தகசங்க நிர்வாகிகளை சந்தித்து மறியல் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்து  குடிநீர் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மணல் குவாரியை மானாமதுரை வைகைஆற்றில் செயல்படுத்தக் கூடாது   என வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் செய்யவேண்டும்  எனகோரிக்கை விடுத்தனர்.

    மேலும் வருகிற  24-ந் தேதி மானாமதுரை நகர்முழுவதும் கடைஅடைப்பு போராட்டத்திற்கு  வணிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வாலிபர்களை காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரைத்ததின் பேரில் கலெக்டர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தின் கீழ் புதுக்குளம் அருகே கடந்த மார்ச் மாதம் 27-ந்் தேதி மருதுபாண்டி என்ற இளைஞரை பழிக்கு பழியாக கொலை செய்த வழக்கில் சிவகங்கை அருகே உள்ள வானியங்குடி பகுதியை சேர்ந்த மணிவண்ணன்,   கணித் என்கிற ராஜ்குமார்,  வைரவன்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, கருப்பு ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 

    அதேபோல் சாக்கோட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுதந்திராபுரம் பகுதியை சேர்ந்த தேவா என்ற மணிகண்டன் கைது செய்யப்பட்டார். 

    மேற்கண்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பரிந்துரைத்ததின் பேரில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி அதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் வாலிபர்கள் 5 பேரும் மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சிவகங்கையில் 56-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேலாயுதபட்டினம் கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர், குருஞ்சியுடைய அய்யனார், ஒத்ததூண் கருப்பர், காமாட்சி அம்மன், பெரியநாயகி அம்மன் கோவில் 56-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
     
    25-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்துகொண்டன. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக வேலாயுதபட்டினம்- தேவகோட்டை சாலையில் நடந்த இந்த பந்தயத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மாடுகள் கலந்து கொண்டன. 

    பெரிய மாட்டிற்கு சென்று வர 8 மைல் தூரம், சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரம் என பந்தயம் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக சிவகங்கை மாவட்டம் வெளிமுத்தி வாஹினியும்,2-வதாக பெரியவீரை பாஸ்கரனும், 3-வதாக கல்லல் உடையப்பா சக்திஅம்பலமும், 4-வதாக சிவகங்கை அருண் ஸ்டுடியோ, வெட்டி சுந்தரேசனும் வெற்றி பெறறனர்.

    சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவது மட்டங்கிப்பட்டி காவியா, இரண்டாவது கல்லல் உடையப்பா சக்தி அம்பலம், மூன்றாவது கே.கே.பட்டி  சிவா மாட்டு வண்டிகள் வெற்றிபெற்றன. வெற்றி பெற்ற மாடுகளுக்கு வேட்டி-துண்டு மாலை செலுத்தி ரொக்கப் பரிசும் மற்றும் முதலாவது வந்த மாடுகளுக்கு சேவலும் பரிசாக வழங்கினர். இந்த பந்தயத்தை  சாலையின் இருபுறங்களிலும்   ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
    சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாதாரண கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாதாரண கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் 27 வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்று வார்டுகளில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனர். 

    ஒட்டுமொத்த கவுன்சிலர்களின் கோரிக்கையாக தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர், நகராட்சி சார்பில் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ2.90 கோடி என்றும் அவை செலுத்தப்பட்ட பின்னர்தான் சரி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். 

    சிவகங்கையில் வாழ்ந்த முக்கிய தலைவர்கள், தியாகிகளுக்கு 
    நினைவுத்தூண்  வைக்க வேண்டும் என்றும் ரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்தும் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    இறுதியில் 1-வது வார்டில் நேர்மையாகவும் சிறப்பாகவும் தூய்மை பணி மேற்கொண்ட முனியாண்டி என்கிற துப்புரவு பணியாளருக்கு நகர்மன்ற தலைவர் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.மேலும் வார்டு கவுன்சிலர் மகேஸ் சார்பில் முணியாண்டி குழந்தையின் கல்வி செலவிற்காக ரூ3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    மானாமதுரை நகரசபை கூட்டத்தில் சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்மன்ற அவசரக் கூட்டம்   தலைவர்மாரியப்பன் கென்னடி தலைமையில்  நடந்தது. 

    துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழி வாசிக்கப்பட்டு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்  உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
     
    அதன் பின்னர் நகராட்சி தலைமை எழுத்தர் கணேசன், மானாமதுரை நகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, காலிமனை இடத்திற்கான வரி உயர்வை அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை வாசித்தார். அப்போது பேசிய அ.தி.மு.க. 15-வது வார்டு உறுப்பினர் தெய்வேந்திரன், கொரோனா  தொற்று  பரவல்   காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்து மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் சொத்துவரி, காலிமனை  வரி உயர்வு  பொதுமக்களை மேலும்  பாதிக்கும். அதனால் இந்த   வரி உயர்வை அமல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து   உறுப்பினர்கள்   வெளிநடப்பு செய்கிறோம் என்றார். 

    அதன்பின் உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கங்கா, இந்திரா, அமுதா ஆகியோர்  வெளியேறினர்.

    அதைத்தொடர்ந்து 10-வது வார்டு பா.ஜ.க. உறுப்பினர் முனியசாமியும் சொத்துவரி, காலிமனை வரி உயர்வவை அமல்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சிவகங்கையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. 


    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.  அப்போது கண்டுப்பட்டியை சேர்ந்த  விவசாயி கருப்பையா என்பவர் மனுக்களை மாலையாக அணி்ந்து வந்தார். 


    அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஏற்கனவே 100 முறை மனு அளித்தேன். 


    அந்த மனுக்கள் மீது இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் அதே கோரிக்கை குறித்து 101-வது மனுவாக அளிக்கவந்துள்ளேன் என்றார்.


     கருப்பையா நூதன முறையில் இதுவரை தான் அளித்த மனுக்களின் நகல்களை லேமினேசன் செய்து கழுத்தில் மாலையாக அணிந்தும், கையில் மனுக்களையும் கொண்டுவந்து மீண்டும் ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தார். இது விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடம் அடகு வைத்த உரிமைகளை தி.முக. அரசு மீட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் நகர தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், எஸ்.ஆர்.பழனிமாணிக்கம் எம்.பி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அமைச்சர் பெரிய
    கருப்பன் பேசியதாவது:- 

    தமிழ்தாட்டு மக்களின் பேராதரவுடன் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் 10 ஆண்டு இருளை விரட்டி  புதிய ஒளி தமிழ்நாடெங்கும் பரவி கொண்டிருக்கிறது.ஒவ்வொரு நாளும்  உயர்வான திட்டங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான தகுதிமிகு சட்டங்களை, அரசின் அறிவிப்பு
    களை, முழுமையாக செயல்படுத்தும்  அர்ப்பணிப்பு, கடைசி மனிதருக்கும் பலன்கள் கிடைத்திடும் வகையில் கட்டமைப்பு, அவற்றின் மீதான கண்காணிப்பு என இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்று பெருமிதம் கொள்கின்ற வகையில் தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. தலைவர் கலைஞரின் 50 ஆண்டு கால நீண்ட அரசியல் அனுபவம்போல மு.க.ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார். 

    தி.மு.க.வின் கொள்கையான உண்மைக்கு, உரிமைக்கு குரல்கொடுப்போம் என்ற ரீதியில்ல்லாவற்றையும் எதிர்ப்போம் என்றில்லாமலும் அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் சமரசமாக சென்றுவிட முடியாது என்கிற அடிப்படையில்தான் கடந்த அரசு 10 ஆண்டுகளில் ஒவ்வொன்றாக அடகுவைத்து சென்ற உரிமைகளை எல்லாம் தற்போதைய தி.மு.க. அரசு மீட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, சிவகங்கை நகர்மன்ற துணை தலைவர் கார்கண்ணன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன்,  நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ராமதாஸ், கார்த்திகேயன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தேவக்கோட்டையில் இன்று காலை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன்கள் விக்னேஷ், பாலாஜி (வயது 35). இருவரும் கட்டிட தொழிலாளிகள்.

    கடந்த சில மாதங்களாக விக்னேஷ் வீட்டில் சம்பளத்தை சரியாகக் கொடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்.

    விக்னேஷ்சுடன் வேலை பார்க்கும் அவரது நண்பர்கள் ஜீவா நகரைச் சேர்ந்த டேவிட் என்ற பிரம்மன் (32), அழகப்பன் (36) ஆகியோர் சம்பளத்தை கொடுக்காமல் அதற்கு பதிலாக மது வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் பாலாஜிக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர் அண்ணனின் நண்பர்களை கண்டித்துள்ளார்.

    இதுதொடர்பாக நேற்றிரவும் பாலாஜி மற்றும் டேவிட், அழகப்பன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இன்று காலை பாலாஜி கட்டிட வேலைக்கு செல்வதற்காக வழக்கம்போல் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே சக தொழிலாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த டேவிட், அழகப்பன் ஆகியோர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த டேவிட், அழகப்பன் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாஜியை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர்.

    ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பாலாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டேவிட் அழகப்பன் ஆகியோரை தேடி வருகிறார்.

    தேவகோட்டையில் இன்று காலை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×