என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தூய்மை பணியாளரின் குழந்தைக்கு நகரசபை தலைவர் துரை ஆனந்த் ஊக்கத்தொகை வழங்கினார்.
  X
  தூய்மை பணியாளரின் குழந்தைக்கு நகரசபை தலைவர் துரை ஆனந்த் ஊக்கத்தொகை வழங்கினார்.

  சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளருக்கு ஊக்கத்தொகை: நகரசபை தலைவர் வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாதாரண கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது.
  சிவகங்கை

  சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாதாரண கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் 27 வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்று வார்டுகளில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனர். 

  ஒட்டுமொத்த கவுன்சிலர்களின் கோரிக்கையாக தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர், நகராட்சி சார்பில் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ2.90 கோடி என்றும் அவை செலுத்தப்பட்ட பின்னர்தான் சரி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். 

  சிவகங்கையில் வாழ்ந்த முக்கிய தலைவர்கள், தியாகிகளுக்கு 
  நினைவுத்தூண்  வைக்க வேண்டும் என்றும் ரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்தும் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

  இறுதியில் 1-வது வார்டில் நேர்மையாகவும் சிறப்பாகவும் தூய்மை பணி மேற்கொண்ட முனியாண்டி என்கிற துப்புரவு பணியாளருக்கு நகர்மன்ற தலைவர் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.மேலும் வார்டு கவுன்சிலர் மகேஸ் சார்பில் முணியாண்டி குழந்தையின் கல்வி செலவிற்காக ரூ3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
  Next Story
  ×