search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    24-ந் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு

    மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி 24 -ந் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை வைகை ஆற்றில் குடிநீர் திட்டங்களுக்கும், பாசனக் கிணறுகளுக்கும் உலை வைக்கும் வகையில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து  கட்சியினர், விவசாயிகள் சங்கங்கள், கிராம மக்கள் உள்ளடக்கிய போராட்டக் குழுவினர் வருகிற மே 24-ந் தேதி (செவ்வாய்கிழமை) மானாமதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். 

    இதற்கிடையில் சிவகங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேசிய கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஆனால் குவாரி செயல்படுவது  உறுதி என தெரிவித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து மறியல் போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மானாமதுரையில்  நடந்தது. 

    இதில் அனைத்து   கட்சியினர், விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மானாமதுரையில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக கலெக்டர் தெரிவித்த தகவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

    அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மானாமதுரை வைகையாற்றில் மணல் குவாரி அமைப்பதை  எதிர்த்தும், அதற்கான உத்தரவை கலெக்டர் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திட்டமிட்டபடி மானாமதுரையில் வருகிற 24ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதுரை - ராமேசுவரம் சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். 

    மேலும் இந்த போராட்டத்தை விளக்கி பிரசாரம் செய்வது, மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு கோருவது, மானாமதுரை வர்த்தகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்பது என தீர்மானிக்கப்பட்டது.

    நேற்றுமாலை  போராட்ட குழுவினர் சிவகங்கை  மாவட்ட வணிகர்சங்க பேரமைப்பு  தலைவர் பாலகுருசாமி முன்னிலையில் வர்த்தகசங்க நிர்வாகிகளை சந்தித்து மறியல் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்து  குடிநீர் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மணல் குவாரியை மானாமதுரை வைகைஆற்றில் செயல்படுத்தக் கூடாது   என வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் செய்யவேண்டும்  எனகோரிக்கை விடுத்தனர்.

    மேலும் வருகிற  24-ந் தேதி மானாமதுரை நகர்முழுவதும் கடைஅடைப்பு போராட்டத்திற்கு  வணிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
    Next Story
    ×