என் மலர்
சிவகங்கை
கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 36 பவுன் நகை திருட்டு போனது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே உள்ள அரசனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர் அங்குள்ள தொடக்க கூட்டு றவு வங்கியில் தலைமை எழுத்தராக உள்ளார்.
கடந்த மாதம் 5-ந் தேதி குடுமபத்தினர் நகைகளை அணிந்துகொண்டு ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து அனைத்து நகைகளையும் ஒரு பேக்கில் வைத்து பூட்டியுள்ளார்.
14-ந் தேதி பேக்கை திறந்து பார்க்கும்போது அதிலிருந்த 35½ பவுன் நகைகளை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவசாமி நகைகளை வீடு முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் பலனில்லை.
இதுகுறித்து சிவசாமி பூவந்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிந்து நகையை யாரேனும் மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
120 கடைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையி்ல் தடை செய்யப்பட்ட 595 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை நகராட்சியை தூய்மை மிகு நகரமாக மாற்ற புதிதாக பொறுப்பேற்ற நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதனடிப்படையில் சிவகங்கை காந்தி வீதி பகுதியில் உள்ள 120 கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு கடைகள் மற்றும் பிரபல ஷாப்பிங் மால்களில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் மற்றும் மெகா சைஸ் பைகள் உள்ளிட்ட 595 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவைகளை வைத்திருந்த கடையின் உரிமையாளர்களுக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதே போல் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த ப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இது குறித்து நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் கூறும்போது, பொதுமக்கள் தானாக முன்வந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து சிவகங்கை நகரை தூய்மையாக மாற்ற ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.
இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க ப்பட்டுள்ளது. யாருக்கும் பயன்தராத வகையில் ஊருக்கு வெளியே பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்கவேண்டியும், அனைத்து கட்சியினர், உள்ளூர் அனைத்து ஜமாத்தார்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மக்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா, செயலாளர் துருக்கி ரபீக்ராஜா ஆகியோர் தலைமையில் இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் கூடி அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
அதன்பின் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டும், புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகவும், கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இதுகுறித்து மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா கூறுகையில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி யாருக்கும் பயன்தராத வகையில் இளையான்குடியில் ஊருக்கு வெளியே 4 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யவும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
விரைவில் தேதி அறிவிக்காமலேயே சென்னையில் தலை மை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பஸ் நிலைய பிரசனைக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்றார்.
இளையன்குடியில் புதிய பஸ் நிலையத்தை திட்டமிட்ட இடத்தில் அமைக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி யில் புதிய பஸ்நிலையம் அமைக்க சிவகங்கை ரோட்டில் கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். நகருக்கு வெளியே அமைப்பதாக பஸ்நிலைய எதிர்ப்பு குழுவினர் பஸ்நிலையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அரசு சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டது. புதிய பஸ்நிலைய ஆதரவாளர்கள் குழு கூட்டம் தி.மு.க. நகர செயலாளர் நஜீமுதின் தலைமையில் நடைபெற்றது. இதில் திட்டமிட்ட இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
தற்போது உள்ள பஸ் நிலையமும் தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும். தற்போது உள்ள பஸ்நிலையத்தில் இருந்து புதிதாக அமைக்க உள்ள பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ்களும் மகளிர் கட்டணம் இல்லாத பஸ்களும் அதிக அளவில் இயக்க வேண்டும் என புதிய பஸ்நிலைய ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
சிவகங்கை அருகே உள்ள பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபள்ளி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழ மேல்குடி கிராமத்தில் 42 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
நேற்று இரவு வீட்டில் அந்த பெண் தனியாக தூங்கி கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 2 மாணவர்கள், 9-ம் வகுப்பு மாணவன் ஆகியோர் வீட்டின் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். மேலும் இது குறித்து வெளியேசொல்லக்கூடாது என்றும் மாணவர்கள் மிரட்டினர்.
இதுகுறித்து அந்தப் பெண் நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த மேற்கண்ட 3பள்ளி மாணவர்கள் மீதும் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக தேனீ தின விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை
காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக தேனீ தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் முன்னோடி விவசாயிகளை வரவேற்றும் மற்றும் விழா நிகழ்வுகளின் சுருக்கத்தையும் பயிர் பாதுகாப்பு துறை தலைவர் பேராசிரியர் விஷ்ணுபிரியா பேசினார்.முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி தேனீக்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து தேனீ வளர்ப்பு பற்றிய கையேட்டினை வெளியிட்டார்.
முதல் பிரதியை கல்லல் முன்னோடி விவசாயி அசோகன் பெற்றுக்கொண்டார்.பின்னர் கலப்படமற்ற தேனை கண்டறியும் முறையை கல்லூரியின் இயக்குனர் கோபால் விளக்கினார். விவசாயத்தில் மகரந்தச்சேர்க்கை மூலம் விளைச்சலை அதிகரிக்க தேனீக்களின் முக்கிய பங்கையும், தேனீ வளர்ப்பு பற்றிய தொழில்நுட்பங்களையும் பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், மதியழகன் ஆகியோர் விளக்கினர்.மாணவர்களின் கண்காட்சிகள் இடம்பெற்றன.
இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.இறுதியாண்டு மாணவி திவ்யா நன்றி கூறினார்.
திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர், நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் தெற்கு ரத வீதியில் மின்வாரியத்தின் சார்பாக சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இதை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ரிப்பன் வெட்டி இயக்கி வைத்தார். அமைச்சரை பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், 12-வது வார்டு கவுன்சிலர் பிளாசா ராஜேஸ்வரி சேகர் ஆகியாேர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
மின்வாரிய செயற்பொ றியாளர் செல்லத்துரை புதிய மின்மாற்றி பற்றி விளக்கினார்.இந்நிகழ்ச்சி யில் உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் முத்தரசி மற்றும் திருப்பத்தூர் மின்சார வாரிய அனைத்து பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து விநோத முறையில் வழிபாடு செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து விநோத முறையில் வழிபாடு செய்து வருகின்றனர்.
கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை, குடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை மற்றும் கறி, மீன், கருவாடு, முட்டை போன்ற அசைவ உணவுகளை சமைத்து பாரம்பரியம் மாறாமல் ஓலைப் பெட்டியில் வைத்து விளக்கேற்றி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவிலை சுற்றி வந்து அசைவ உணவுகளை படையல் வைத்து குலவையிட்டு வழிபாடு செய்தனர்.
கோவில் பூசாரி வாயை கட்டிக் கொண்டு பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை அம்மனுக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து விநோத முறையில் வழிபாடு செய்து வருகின்றனர்.
கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை, குடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை மற்றும் கறி, மீன், கருவாடு, முட்டை போன்ற அசைவ உணவுகளை சமைத்து பாரம்பரியம் மாறாமல் ஓலைப் பெட்டியில் வைத்து விளக்கேற்றி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவிலை சுற்றி வந்து அசைவ உணவுகளை படையல் வைத்து குலவையிட்டு வழிபாடு செய்தனர்.
கோவில் பூசாரி வாயை கட்டிக் கொண்டு பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை அம்மனுக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
தனியார் பங்களிப்புடன் 7 கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலுகோட்டையில் 7 கண்மாய்களை நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணியை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வள ஆதாரங்களை சீரமைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்திடும் வகையில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட துரித நடவடிக்கைஎடுத்து வருகிறார்.
நீர்நிலைகளை பாதுகாத்திட தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்களிப்பை அளித்திட முன்வந்துள்ளனர். அதன்படி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலுக்கோட்டை ஊராட்சியில் உள்ள 7 கண்மாய்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் புனரமைக்கப்பட உள்ளன.
இதன் மூலம் மழைக்காலங்களில் பெறப்படும் நீர்விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையிலும்; சேமிக்கப்படவுள்ளன.
நாலுகோட்டையில் உள்ள சங்கிலித்தொடர் கண்மாய்களான பில்லாணி, பன்னியன், சிறுகுடி, தாமணி, பொட்டல்குளம், கருங்குளம் மற்றும் செங்குளம் ஆகிய 7 கண்மாய்களை ரூ.55 லட்சத்து 34 ஆயிரத்து 847 மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் திட்டப்பணிகளையும் செப்படம்பர் 2022-க்குள் நிறைவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை கிராம மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சின்ஜெண்டா இந்தியா நிறுனத்தின் தேசிய தலைவர் வைத்தியநாதன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் கண்ணன், தலைமை இயக்க அலுவலர் கொண்டா ராதாகிருஷ்ணன், நாலுக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன், பாசன விவசாயிகள் நாராயணன், பாலகிருஷ்ணன், மணிமுத்து செட்டியார், சிவராமன், கணேசன், அர்ச்சுனன் ராஜ்குமார் துணை தலைவர் சக்தி, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நாலுகோட்டை ஊராட்சி கிராம மக்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் அனந்தராமன் நேத்ரா, தமிழரசி, காளியம்மை, மீனாட்சி, கனிமொழி, சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா கொண்டாட்டப்பட்டது.
திருப்பத்தூர்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா 2002-ம் ஆண்டில் இருந்து சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.
முத்தரையர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக வந்து திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது சதய விழா முத்தரையர் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர், காரையூர், ரணசிங்கபுரம், அய்யாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதனைத்தொடர்ந்து கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் சதய விழாவை கொண்டாடினர்.
இதில் முத்தரையர் கூட்டமைப்பின் இளைஞர்கள், மகளிர் அணி தலைவி அய்யாபட்டி லதா, ஆத்திக்காடு மாரிமுத்து, காரையூர் தவசு, திருக்கோஷ்டியூர் வட்டார தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மேலயான்பட்டி சக்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்துள்ள மல்லவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவருக்கும் இவரது தம்பி பாஸ்கரனுக்கும் வீடு தொடர்பாக பிரச்சினை இருந்துவருகிறது.
இது தொடர்பாக மானாமதுரை காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் சிவகங்கை எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். அதிலும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்த முதியவர் கணேசன், கலெக்டர் அலுவலக வாயிலில் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை கண்ட அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் திருவிழாவையொட்டி கபடி போட்டிக்கு ராஜராஜன் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம் பெற்றவர்களை படத்தில் காணலாம்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி செஞ்சை குடிக்காத்தான் திடலில் நடந்தது.
2 நாட்கள் நடந்த போட்டிகளில்தூத்துக்குடி,கன்னியாகுமாரி, திருச்செங்கோடு உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அமராவதி புதூர் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும், காரைக்குடி லலிதா பேக்ஸ் அணியும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில் ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி வெற்றிபெற்று முதல் பரிசான ரூ.50 ஆயிரத்தை வென்றது.2-ம் பரிசான ரூ.30 ஆயிரத்தை காரைக்குடி லலிதா பேக்ஸ் அணியும்.3-வது, 4-வது பரிசுகளை ராயல் சர்வா அணியும்,சுப்பையா பிரதர்ஸ் அமராவதி புதூர் அணியினரும் பெற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கழக சேர்மன் வேலு, நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் மாறன், ஆறுமுகம், செழியன், கார்த்திக்நேரு உள்பட காரைக்குடி,செஞ்சை மண்ணின் மைந்தர்கள் செய்திருந்தனர்.






