என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வழக்கு
  X
  வழக்கு

  பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகங்கை அருகே உள்ள பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபள்ளி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சிவகங்கை

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழ மேல்குடி கிராமத்தில் 42 வயது பெண் வசித்து  வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களாக  கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். 

  நேற்று இரவு வீட்டில் அந்த பெண் தனியாக   தூங்கி கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-1  படிக்கும் 2 மாணவர்கள், 9-ம் வகுப்பு   மாணவன் ஆகியோர் வீட்டின் கதவை உடைத்து   அத்துமீறி நுழைந்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். மேலும் இது குறித்து வெளியேசொல்லக்கூடாது என்றும் மாணவர்கள் மிரட்டினர். 

  இதுகுறித்து அந்தப் பெண்  நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில்   புகார் செய்தார். அதன் பேரில் கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த மேற்கண்ட 3பள்ளி மாணவர்கள் மீதும் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×