search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    7 கண்மாய்கள் தூர்வாரும் பணி தொடங்குவதின் அடையாளமாக கல்வெட்டை கலெக்டர் மதுசூதன்ரெட்டி திறந்து வைத்தார்.
    X
    7 கண்மாய்கள் தூர்வாரும் பணி தொடங்குவதின் அடையாளமாக கல்வெட்டை கலெக்டர் மதுசூதன்ரெட்டி திறந்து வைத்தார்.

    தனியார் பங்களிப்புடன் 7 கண்மாய்கள் தூர்வாரும் பணி

    தனியார் பங்களிப்புடன் 7 கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.


    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலுகோட்டையில் 7 கண்மாய்களை நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணியை கலெக்டர்    மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நீர்வள ஆதாரங்களை சீரமைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்திடும் வகையில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட துரித நடவடிக்கைஎடுத்து வருகிறார்.  

    நீர்நிலைகளை பாதுகாத்திட தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்  பங்களிப்பை அளித்திட முன்வந்துள்ளனர். அதன்படி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலுக்கோட்டை ஊராட்சியில் உள்ள 7 கண்மாய்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் பங்களிப்புடன்  புனரமைக்கப்பட உள்ளன. 

    இதன் மூலம் மழைக்காலங்களில் பெறப்படும் நீர்விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையிலும்; சேமிக்கப்படவுள்ளன.
     
    நாலுகோட்டையில் உள்ள சங்கிலித்தொடர் கண்மாய்களான பில்லாணி, பன்னியன், சிறுகுடி, தாமணி, பொட்டல்குளம், கருங்குளம் மற்றும் செங்குளம் ஆகிய 7 கண்மாய்களை ரூ.55 லட்சத்து 34 ஆயிரத்து 847 மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

    அனைத்துத் திட்டப்பணிகளையும் செப்படம்பர் 2022-க்குள் நிறைவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிராமத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை கிராம மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சின்ஜெண்டா இந்தியா நிறுனத்தின்  தேசிய தலைவர் வைத்தியநாதன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் கண்ணன், தலைமை இயக்க அலுவலர் கொண்டா ராதாகிருஷ்ணன், நாலுக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன், பாசன விவசாயிகள் நாராயணன், பாலகிருஷ்ணன், மணிமுத்து செட்டியார், சிவராமன், கணேசன், அர்ச்சுனன் ராஜ்குமார் துணை தலைவர் சக்தி, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நாலுகோட்டை ஊராட்சி கிராம மக்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் அனந்தராமன் நேத்ரா, தமிழரசி, காளியம்மை, மீனாட்சி, கனிமொழி, சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×