என் மலர்
சிவகங்கை
- மான்போர்டு பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
- தாளாளர் விக்னேஷியஸ் தாஸ் தலைமையில் விளையாட்டு விழா நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள மான்போர்டு பள்ளியில் 9-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகள் பெற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக மண்டல அளவில் சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற (496/500) ஜனனிப்ரியா மற்றும் பெற்றோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மண்டல மான்போர்டு சபை தலைவர் இருதயம் தலைமை தாங்கினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முகமது சலாஜுதீன் பங்கேற்று சிறப்பித்தார். தாளாளர் விக்னேஷியஸ் தாஸ் தலைமையில் விளையாட்டு விழா நடந்தது.
- ரேசன் கடை ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
- சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் பாதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனுக்களாக கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜனிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து இந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடை ஊழியர்கள் பணிக்கு சரிவர வருவதில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்ற தலைவர், கிராமத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, ஆரம்ப சுகாதார மையம், கழிவு நீர் பாதை போன்றவற்றிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ரேசன் கடை ஊழியர்கள் பணிக்கு சரிவர வராமல் இருப்பது குறித்து, அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.
இதில் நூற்றுக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்றனர்.
- விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் 22-ந் தேதி தொடங்குகிறது.
- வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா பல்வேறு கட்டுப்பாடு களுடன் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழா நாட்களில் இரவு கற்பகவிநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். முதல் நாள் இரவு மூஷிக வாகனத்திலும், 2-ம் நாள் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும், 4-ம் நாள் கமல வாகனத்திலும், 5-ம் நாள் ரிஷிப வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
6-ம் நாள் விழாவான வரும் 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் நாள் திருவிழாவில் மயில் வாகனத்திலும், 8-ம் நாள் திருவிழா அன்று குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.
9-ம் நாள் திருவிழா வான 30-ந் தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்த ருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடக்கிறது.
- 13 ஊர் குலால பங்காளிகள் பங்கேற்ற ஆதிப்பாட்டி அம்பாள் பூஜை விழா நடந்தது.
- காவல் உதவி ஆய்வாளர் ஜேசுதாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நாடு ராஜக்கம்பட்டி நாட்டைச் சேர்ந்த கண்டவராயன்பட்டி, நடுவிக்கோட்டை பங்காளிகள் நடத்தும் 13 ஊர் குலால பங்காளிகளின் ஆதிப்பாட்டி அம்பாள் 6-வது பூஜை படைப்பு விழா நடந்தது.
முதல் நாள் நிகழ்வாக நடுவிக்கோட்டையில் உள்ள சூலக்கருப்பர் கோவிலில் தீபாராதனை வழிபாடு, தொங்கலுடைய அய்யனார் கோவிலில் ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமி அழைப்பு, கிடா வெட்டுதல் நடைபெற்று, மேல்குடி ஆதினமிளகி அய்யனார், வல்லநாட்டுக்கருப்பர் கோவிலுக்கு சுவாமி அழைத்துச் செல்லும் நிகழ்வு நடந்தன.
தொங்கலுடைய அய்யனார் கோவிலில் சிறப்பு தீபாரதனை நடைபெற்று, அதனை தொடர்ந்து படையல் விழா நடந்தது. மேல்குடி ஆதீனமிளகி அய்யனார், வல்லநாட்டு கருப்பர் கோவிலில் படையல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
வல்லநாட்டு கருப்பருக்கும், பரிவார தெய்வங்களுக்கும், சுவாமி அழைப்பும், சிறப்பு அபிஷேக ஆராதனை, கிடா வெட்டுதலும் நடந்தன. மாலையில் காடப்பிள்ளை அய்யனார், வல்லநாட்டுக்கருப்பர் கோவிலில் இருந்து சுவாமி அழைத்துக் கொண்டு நாட்டார் முழப்படல் வருதல், முழப்பொட்டலில் இருந்து நாட்டார், நகரத்தாரை மேளதாளம் வாணவேடிக்கையுடன் பங்காளிகள் மற்றும் பிறந்த பெண் பிள்ளைகள், குழந்தைகளின் பூத்தட்டு ஆதிப்பாட்டி அம்பாளை அலங்கரித்தல் அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது.
விழாவில் கண்டவராயன்பட்டி, நடுவிக்கோட்டை, தி.புதுப்பட்டி, செண்பகம்பேட்டை, நெடுமரம், சதுர்வேதமங்கலம், காளாப்பூர், சிங்கம்புணரி, சொக்கலிங்கபுரம், மல்லாக்கோட்டை, கட்டாணிப்பட்டி, அழகம்மாநகரி, பிடாரம்பட்டி ஆகிய 13 ஊர் குலால பங்காளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் அமைச்சர் பெரியக்கருப்பன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். திருப்பத்தூர் கண்டவராயன்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ஜேசுதாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் தேசியக்கொடிைய ஏற்றி, ரூ.1 கோடியே 55 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- றப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 55 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்கள் 457 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை அருகே 17-ந் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள கிளாதரி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள நாடகமேடையில் கலெக்டர் தலைமையில் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
- சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா நடைபெற்றது.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலைமுதல் மாலை வரை நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 165-வது அவதார விழா கருப்பனேந்தல் மடத்தில் நடந்தது. புனித நீர் கலசங்கள் வைத்து மாயாண்டி சுவாமிகள் சன்னதி முன்பு சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது. குலால சமுதாய சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர்.
பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கலச நீராலும், அபிஷேகப் பொருட்களாலும் மாயாண்டி சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அவதார விழாவில் பங்கேற்று மாயாண்டி சுவாமிகளை தரிசனம் செய்தனர். கருப்பனேந்தல் மடத்தில் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா கணபதி, முருகன் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை நடந்தது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலைமுதல் மாலை வரை நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு சுவாமி பூப்பல்லக்கில் வீதி உலா நடந்தது.
- தேவகோட்டை புவனேசுவரி அம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.
- வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.
தேவகோட்டை
தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள புவனேசுவரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 12-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
நேற்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் வழிபாடு செய்தனர். அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனை நடைபெற்று, அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.
- சான்று இல்லாமல் பொட்டல பொருட்களை விற்ற 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை
சென்னை முதன்மைச் செயலாளர்-தொழிலாளர் ஆணையரின் உத்தரவின்படியும், சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிவுறுத்தலின் படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரின் வழிகாட்டுதலின்படியும, தொழிலாளர் இணை ஆணையரின் அறிவுரையின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுபவர்கள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்யும் 35 வணிக நிறுவனங்களில்
சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பொட்டல–ப்பொருட்கள் விதிகளின் கீழ் காணப்பட வேண்டிய சான்றுரைகள் இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த 5 நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தயாரிப்பாளர்களும் பொட்டலம் இடுபவர்களும் விற்பனையாளர்களும், நுகர்வோர் நலன் கருதி தயாரிப்பாளர், பொட்டலமிடுபவரின் பெயர், முழு முகவரி, பொட்டலப்பொருளின் பெயர், நிகர எடை, தயாரிக்கப்பட்ட மாதம் ,வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பின்பற்றப்பட வேண்டிய விபரங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வணிகர்கள் எடை அளவைகள் மற்றும் தராசுகளை முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். மேலும், வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் அவர்களின் பெயர், விவரங்களை "labour.tn.gov.in/ism" என்ற இணையதளத்தில் கட்டாயம் விடுதலின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.
- இளையான்குடியில் ரூ.2.41 கோடியில் வேளாண் விரிவாக்க மையம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
- இந்த ைமயத்தின் வாயிலாக வேளாண் பெருங்குடி மக்கள் விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சேமிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு பயனுள்ள வகையிலும் மையத்தில் தனியாக இடங்கள் அமைக்கப்பட உள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி பகுதியில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், இந்த ைமயத்தின் வாயிலாக வேளாண் பெருங்குடி மக்கள் விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சேமிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு பயனுள்ள வகையிலும் மையத்தில் தனியாக இடங்கள் அமைக்கப்பட உள்ளன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம் பெறுவதை தடுக்கும் வகையில் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன் பெற்று வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், வேளாண் இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் இந்திரா, ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி சாந்தாராணி, இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவகங்கை மாவட்ட வக்கீல் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் நெல்சன் ஜீவா வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைசெயலாளர் இளையராஜா தொடக்க உரையாற்றினார்.
சிவகங்கை வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைச்சாமி' பொரு ளாளர் செல்வராஜ், இணை செயலாளர் மணிகண்டன், அரசு வழக்கறிஞர்கள் அழகர்சாமி, பிரபாகர், ஸ்ரீசாய் சுந்தர், துஷாந்த் பிரதீப்குமார், நிர்மலா, சேகர் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை தலைவர் அஜீதாகூர் குற்றவியல் விசாரணை பற்றி கருத்துரையாற்றினார்.
மாநில பொதுச் செயலா ளர் முத்து அமுதநாதன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் மாவட்ட தலைவராக ராஜசேகரன், மாவட்ட செயலாளராக மதி, மாவட்ட பொருளாளராக சொர்ணம், மாவட்ட துணை தலைவர்களாக கமலதயாளன், அஜூ தாகூர், மாவட்ட துணை செயலாளர்களாக நெல்சன் ஜீவா, இளைய ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்களாக சகாய சுதாகர், காளைஈஸ்வரன், நிருபன் சக்ரவர்த்தி, சரவணன், ஜேம்ஸ் ராஜா, தீபா, துரைபாண்டி, பூர்ணிமா, சுசீலா, செந்தில்வேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்மாகை வட்டத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு சொந்தமாக நீதிமன்ற கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், சுத்தமான குடி தண்ணீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.
- திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோவில் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து வழிபாடு நடத்தினர்.
- இளைஞர் குழுவினர் மற்றும் விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆலமரத்தடி காளியம்மன், ராஜ காளி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுக்கும் விழா நடைபெற்றது.
விழாவையொட்டி காளியம்மனுக்கு திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், மதுக்குடம், காவடி, தீச்சட்டி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.
இந்த பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் ராமர் மடம், ஆதி திருத்தளிநாதர் ஆலயத்தில் இருந்து நான்குரோடு, பேருந்து நிலையம், செட்டியதெரு, காளியம்மன் கோவில் தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்பு அங்கு தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பால்குடத்துடனும், குழந்தைகளை சுமந்தபடியும் தீச்சட்டி ஏந்தியபடியும் அலகு குத்தியபடியும் கோவில் வாசல் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்கி நேர்த்தி க்கடனை நிறைவேற்றினர்.
பின்பு அம்மனுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பத்தூர் செட்டியதெரு இளைஞர் குழுவினர் மற்றும் விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்






