என் மலர்tooltip icon

    சேலம்

    • மேட்டூர் அணைக்கு வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
    • நேற்று 117.06 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 116.53 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில் இன்றும் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 3,123 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 3,165 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    அணைக்கு வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 117.06 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 116.53 அடியாக சரிந்தது.

    • சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் வைத்தியலிங்கம் (வயது 48) என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார்.

    அப்போது, கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வைத்தி யலிங்கம் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • 6 பேர் கொண்ட கும்பல், பஸ்சின் நடத்துனரான ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 30) என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. சேலம் அம்மாபேட்டை டி.எம்.எஸ் பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது, 6 பேர் கொண்ட கும்பல், பஸ்சின் நடத்துனரான ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 30) என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், பஸ்சில் வந்த பயணி ஒருவரை ஆத்தூர் அருகே நடத்துனர் பாலசுப்பிரமணி இருக்கை மாறி அமரச் சொல்லி உள்ளதார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி, தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரச் சொல்லி இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
    • ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    சேலம்:

    சேலம் மாநக ராட்சிக்குட்பட்ட தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடப்பு ஆண்டில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த மாமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதவாது:-

    கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதே போன்று நடப்பு ஆண்டிலும் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாகும்.

    குறிப்பாக தரமான சாலைகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், குப்பையில்லாத நகரமாக மாற்றுதல், அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்தல், தரமான மருத்துவசேவை, மாநகராட்சிப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரமான கழிவறை வசதிகள் செய்து தருதல், ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    மேலும், மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து

    தரப்பு மக்களுக்கும் தேவை யான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிடவும், மற்ற மாநகராட்சிகளை காட்டிலும் சேலம் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உருவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மண்டலக்குழுத்தலை வர்கள் கலையமுதன், உமாராணி, தனசேகர், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் நிலைக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி ஊராட்சி செங்கனூர் பகுதியை சேர்ந்தவர் வாலிபர் கொலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி ஊராட்சி செங்கனூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீதர்(வயது 26). இவர் தனது நண்பர்களுடன் கடந்த டிசம்பர் 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாடிய கொண்டிருந்த பொழுது அவர் தரப்பினருக்கும் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் காரணமாக கை களைப்பு ஏற்பட்டது.

    இதில் ஸ்ரீதர் ஒருசிலரால் தாக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைதொடர்ந்து ஸ்ரீதர் கொலை வழக்கு சம்பந்தமாக ஓமலூர் போலீசார் முதல் கட்டமாக விக்ரம் மற்றும் மோகன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக், லித்திஷ், கோகுல், மற்றொரு கார்த்திக், பெருமாள் மற்றும் நித்திஷ்கண்ணன், ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
    • திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.

    சேலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.

    இவருடன் பயணித்த, மற்றொரு பயணி 5 ரோடு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து ரமேஷிடம் பணம் பறித்த மர்ம நபரை தேடி வருகிறார். 

    • சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.
    • அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    சேலம்:

    சேலம் உடையாபட்டி சின்ன ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பூபாலன் (வயது 35). இவர் சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.

    தர்ஷித் அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    மகனின் போட்டோவை எடுக்காமல் வந்து விட்ட தால், மீண்டும் வீட்டுக்கு சென்ற பூபாலன் போட்டோவை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார். அப்போது, பள்ளியில் விட்டுச் சென்ற மனைவி நித்யா, குழந்தைகள் தர்ஷித், ஷிவானி ஆகியோரை காணவில்லை. இதையடுத்து அவர் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூபாலன், இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    திருவண்ணாமலைக்கு அரூர், ஊத்தங்கரை வழியாகவும், திருவண்ணா–மலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும், சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது. எனவே, இந்த வழித்–தடங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களை பயணிகள் அனைவரும் பயன்படுத்தி பயண நெரிசலை தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • மகுடஞ்சாவடி வட்டார வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய சட்ட அரங்கில் வேளாண்மைத்துறையின்‌ கீழ்‌ தேசிய சமையல்‌ எண்ணெய் வித்து இயக்கத்தில்‌ மர எண்ணெய் வித்துப் பயிர்கள்‌. சாகுபடி திட்டத்தில்‌ விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பமிற்சிக்கான ஏற்பாடுகளை மகுடஞ்சாவடி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள்‌ மற்றும்‌ அட்மா திட்ட பணியாளர்கள்‌ செய்திருந்தனர்‌.

    மகுடஞ்சாவடி:

    மகுடஞ்சாவடி வட்டார வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய சட்ட அரங்கில் வேளாண்மைத்துறையின் கீழ் தேசிய சமையல் எண்ணெய் வித்து இயக்கத்தில் மர எண்ணெய் வித்துப் பயிர்கள். சாகுபடி திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் வரவேற்றார்.

    சேலம் வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் பமிற்சிமினை தொடங்கி வைத்து பேசினார். வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர் கலைச்செல்வி அவர்கள் மரப்பயிர்கள் சாகுபடி, இயற்கை,வேளாண்மை. குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி முதல்வர் பார்த்திபன் இணைய வழியாக விவசாயிகளுக்கு உகந்த மரப்பயிர்கள், அவற்றின் சாகுபடி தொழில் நுட்பங்கள், சந்தைப்படுத்துதல், விற்பனை

    வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    பயிற்சியில் உழவன் - செயலி பயண்பாடு, மண்மாதிரி, எடுத்தல், நுண்ணிர்பாசனம், துணை நீர்பாசன மேலாண்மை செயல்பாடுகள், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், நுண்ணூட்ட சத்து, பயன்பாடு குறித்து கருத்துக்காட்சி சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தது.

    பமிற்சிக்கான ஏற்பாடுகளை மகுடஞ்சாவடி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். முடிவில் வட்டார வேளாண்மை அலுவலர் பழனிசாமி நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
    • மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அவர் தெரிவித்ததாவது:

    சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி டிசம்பர் 8-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்மேகம் வெளியிட்டார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 14,73,024 பேரும், பெண்கள் 14,87,294 பேரும், இதரர் 275 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 53,370 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டும், 67,027 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டும், இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 45,880 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில் விண்ணப்பப்படி வங்களைப் பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) எம்.ஜி.சரவணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • மலை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 1 முதல் 8 வகுப்பு வரை, ஏறக்குறைய 100 பழங்குடியின மாணவ –மாணவியர் படித்து வருகின்றனர்.
    • அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கி ணைந்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாண வர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதோடு, பல்வேறு கலைத்திறன் மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையில் மண்ணூர் கிராமம் அமைந்துள்ளது. பழங்குடியின மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்திற்கு, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் வரை சாலை போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படை வசதிகள் கிடைத்தது.

    இந்த மலை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 1 முதல் 8 வகுப்பு வரை, ஏறக்குறைய 100 பழங்குடியின மாணவ

    –மாணவியர் படித்து வருகின்ற னர். தலைமையாசிரியர் கதிர்வேல் உள்பட வெங்க டாஜலம், பா.சக்திவேல், நல்லுசாமி, ர.சரண்யா, லீலாவதி ஆகிய 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கி ணைந்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாண வர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதோடு, பல்வேறு கலைத்திறன் மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளித்து வருகின்றனர். இதனால், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்திய வட்டார அளவி லான கலைத்திருவிழா குழு நடனப்போட்டியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவ–மாணவியர், கா.காவியா.

    பொ.மாலதி.மு.ரஞ்சித்கு மார், மு.சந்ரு, த.வினோத், த.லோகேஸ்வரன், ஜெ.கோகுல்கிருஷ்ணா, ஆ.செல்லதுரை, பொ.சரத்கு மார் ஆகியோர் கொண்ட குழுவினர் முதலிடம் பிடித்து

    மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    இதனையடுத்து, அண்மையில் மதுரையில் செளராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா நடனப் போட்டியில் பங்கேற்ற இப்பள்ளிக் குழுவினர், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து போட்டியில் பங்கேற்ற குழுக்களை விட மிகச் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.

    முதன்முறையாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று கிராமத்திற்கு திரும்பிய மாணவ–மாணவியருக்கு, மண்ணுார் மற்றும் மாமாஞ்சி மலை கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து, மேள வாத்தியம் முழுங்க பாரம்பரிய முறைப்படி ஆரத்தியெடுத்து, மாலை யணிவித்து பொன்னாடை போர்த்தி அதிர் வேட்டு முழங்க வரவேற்பளித்து கெளரவித்தனர்.

    மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கணித ஆசிரியர் சக்திவேல் மற்றும்

    ஊக்குவித்த தலைமை யாசிரியர் கதிர்வேல் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர். வட்டார, மாவட்ட, மாநில பள்ளிக்கல்வித்துறை உயரதி காரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய 4 கால சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
    • இந்த கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தது.

    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய 4 கால சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

    இந்த கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தது. அந்த ஆண்டு கும்பாபிஷேக விழாவிற்காக பாலாலயம் செய்யப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படவில்லை. கடந்த செப்டம்பரில் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட உள்ளது.

    இதை ஒட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடராஜருக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், பழங்கள் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த சிறப்பு அபிஷேகம் நாளை காலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    இதன் தொடர்ச்சியாக சுகவனேஸ்வரருக்கு தங்க நாகாபரணம், அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.

    இதேபோல் அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகிரி சுப்பிரமணி சுவாமி கோவில், உத்தமசோழபுரம் கராபுரநாதர் கோவில், வேலூர் தான்தோன்றி ஈஸ்வரன் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், சிவன் கோவில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களின் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×