search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 feature"

    • கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
    • ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    சேலம்:

    சேலம் மாநக ராட்சிக்குட்பட்ட தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடப்பு ஆண்டில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த மாமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதவாது:-

    கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதே போன்று நடப்பு ஆண்டிலும் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாகும்.

    குறிப்பாக தரமான சாலைகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், குப்பையில்லாத நகரமாக மாற்றுதல், அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்தல், தரமான மருத்துவசேவை, மாநகராட்சிப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரமான கழிவறை வசதிகள் செய்து தருதல், ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    மேலும், மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து

    தரப்பு மக்களுக்கும் தேவை யான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிடவும், மற்ற மாநகராட்சிகளை காட்டிலும் சேலம் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உருவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மண்டலக்குழுத்தலை வர்கள் கலையமுதன், உமாராணி, தனசேகர், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் நிலைக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×