சேலத்தில் எலக்ட்ரிக் கடையில் துணிகர கொள்ளை

சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
சேலத்தில் எலக்ட்ரிக் கடையில் துணிகர கொள்ளை
Published on

சேலம்:

சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் வைத்தியலிங்கம் (வயது 48) என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார்.

அப்போது, கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வைத்தி யலிங்கம் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com