என் மலர்
சேலம்
- சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நார்த்தஞ்சேடு கிராமம்.
- இந்த கிராம மக்கள் சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்தினர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நார்த்தஞ்சேடு கிராமம். இந்த கிராம மக்கள் சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்தினர். இதை தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் சாலை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு, இன்று சாலை அமைக்கும் பணியை தொடங்கி
னர். இந்த நிலையில், நார்த்தஞ்சேடு கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள சுமார் 18 கிராம மக்களும், தற்போது போடப்படும் சாலை எங்களுக்கு வேண்டாம் எனவும், நீதிமன்ற ஆணைப்படி 6-வது வழித் தடத்தில் சாலை அமைத்து தர கோரியும், திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு வழியாக சேலம் செல்லும் சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
- நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சந்திரசேகரனின் ஓட்டு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சந்திரசேகரனின் ஓட்டு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த பிரிஜ்ட், சோபா உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து போனது. விசார ணையில், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அம்மா ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புவியியல் மற்றும் சுரங்க துறை தனி வருவாய் ஆய்வாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டி கிரா மத்தில் சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை தனி வருவாய் ஆய்வாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினர். அப்போது அதன் டிரைவர் கீழே இறங்கி ஓடினார். லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து
தாரமங்கலம் காவல்
நிலையத்தில் ஒப்படைத்த னர். மேலும் இது தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருணாகரன் (வயது 54). விவசாயியான இவருக்கு அதேபகுதியில் 1.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
- கடனுக்கு பாதுகாப்பாக சொத்தின் பவரை தனது பெயருக்கு கடன் கொடுத்தவர் எழுதி வாங்கியுள்ளார்.
சேலம்:
சேலம் நிலவாரப்பட்டி செம்மலைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 54). விவசாயியான இவருக்கு அதேபகுதியில் 1.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் வசிக்கும்
கந்துவட்டி தொழில் நடத்தி
வரும் ஒருவரிடம் ரூ.90 ஆயிரம் அவசரத்தே வைக்காக பணம் வாங்கியுள்ளார்.
அப்போது இவரிடம் கடனுக்கு பாதுகாப்பாக சொத்தின் பவரை தனது பெயருக்கு கடன் கொடுத்தவர் எழுதி வாங்கியுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த கடனை திருப்பி கொடுத்த பிறகு அசல் பவர் பத்திரத்தை ரத்து செய்யுமாறு கருணாகரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பணம் கொடுத்தவர் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கருணாகரன் சொத்தின் மீது வில்லங்கம் உள்ளதா என ஈசி போட்டு பார்த்துள்ளார். அப்போது கருணாகரனின் கையெழுத்தினை போட்டு போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்தினை பணம் கொடுத்தவரின் தந்தையின் பெயருக்கு கிரயம் செய்துள்ளது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த விவசாயி இது குறித்து சேலம் மாநகர நில அபகரிப்பு போலீசில் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் சேலம் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுமீதும் உரிய நடவடிக்கை எடுக்காததால், கருணாகரன் சென்னை உயர்தீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து விவசாயி கருணாகரன் மனுமீது உரிய விசாரணை நடத்தி 2 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு சேலம் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- விபத்தில் கணவனை இழந்த சூழலிலும், சந்தியா துரிதமாக முடிவெடுத்து பிரபுவின் கண்களை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- விபத்தில் பிரபு உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து, சங்ககிரி மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சந்தியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, வேலம்மாவலசு பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 35). பி.இ. பட்டதாரி. இவர், அதே பகுதியில் ரெடிமேட் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சந்தியா (32) என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில் பிரபு நேற்று மாலை வைகுந்தத்தில் இருந்து சங்ககிரி நோக்கி டூவீலரில் சென்றார். ஆவரங்கம்பாளையம் என்ற இடத்தில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோட்டூர்மலை பகுதியைச் சேர்ந்த பழனிவேல்(50) என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி, பிரபுவின் டூவீலர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பிரபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டிப்பர் லாரி டிரைவர் பழனிவேல், பச்சாபாளையம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆயில் லோடுடன் நின்றிருந்த லாரி மீது மோதி, மற்றொரு விபத்தை ஏற்படுத்தி விட்டார். இந்த விபத்தில் மயக்கம் அடைந்த பழனிவேலுவை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவங்கள் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் பிரபு உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து, சங்ககிரி மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சந்தியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது சந்தியா, கணவனின் கண்களை தானமாக வழங்க முடிவு செய்து மருத்துவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, ஈரோடு தனியார் கண் மருத்துவமனையினர் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு வந்து பிரபுவின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர்.
விபத்தில் கணவனை இழந்த சூழலிலும், சந்தியா துரிதமாக முடிவெடுத்து பிரபுவின் கண்களை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.
- அணைக்கு வரும் நீர்வரத்த காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்த வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.
நேற்று காலை விநாடிக்கு 3,165 கனஅடியாக இருந்து நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,260 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்த காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்த வருகிறது.
நேற்று 116.53 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 116 அடியாக சரிந்தது.
- ஏரி ரோடு பகுதியில் நடந்து சென்றபோது சில நபர்கள் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தனர்.
- கஞ்சா கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி அவருக்கு மிரட்டல்
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு கேபி கரடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ( வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது உறவினரை பார்க்க தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சில நபர்கள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த அவர் அதைத் தட்டிக் கேட்ட போது, கஞ்சா கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு, மோதல் ஏற்பட்டு, ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்ட னர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கஞ்சா விற்பனை செய்த தாதகாப்பட்டி கேட் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கலைவாணி ( வயது41), அம்மாள் ஏரி ரோடு பகு தியைச் சேர்ந்த பிரபாகரன் என்கிற முட்டைக்கண் பிரபு (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.39,100 பணம், 260 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- பழைய ரேஷன் கடை அருகே, ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல்
- கர்நாடக பதிவு எண் கொண்ட மினி லாரி
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே ரெட்டிபட்டி அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ள பழைய ரேஷன் கடை அருகே, ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு நின்றிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
அதில், மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மினி லாரியையும், 7 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து, சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த லாரி யாருக்கு சொந்தமானது? அரிசி எங்கு ஏற்றப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்–படினை சாகுபடி
- விவசாயிகளிடம் கரும்பினை மொத்தமாக கொள்முதல்
எடப்பாடி:
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்கான கரும்புகளை கொள்முதல் செய்திடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்ப–னூர், வடக்கத்திக்காடு, ஓணாம் பாறையூர், மோளப்பாறை பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்–படினை சாகுபடி செய்துள்ளனர். இங்கு அறுவடைக்கு தயாராக உள்ள செங்குறும்புகளை தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்துள்ள கூட்டுறவு சங்கத்தினர், இப்பகுதி விவசாயிகளிடம் கரும்பினை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பூலாம்பட்டி அடுத்த கூடக்கல் பகுதியில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் கரும்பு வயல்களை ஆய்வு செய்து, அங்கு நடைபெற்று வரும் அறுவடை பணி மற்றும் கொள்முதல் விவரங்களை பார்வையிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கரும்புக்கு உரிய விலை கிடைக்கப் பெறுகிறதா? கொள்முதல் செய்யப்பட்ட தொகை எவ்வாறு வழங்கப்படுகிறது? உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது கூட்டுறவு கூடுதல் பதிவாளர் சிவமலர், இணைப்பதிவாளர் ரவிக்கு–மார் மற்றும் எடப்பாடி தாசில்தார் லெனின் பூலாம்பட்டி பேரூராட்சி தலை வர் அழகுதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- முத்தம்பட்டி பகுதியில் நேற்று அதிரடி சோதனை
- வீட்டில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை
வாழப்பாடி
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்ப டுவதாக, வாழப்பாடி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்த பாரத் (வயது 43) என்பவர், அனுமதியின்றி வீட்டில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த வாழப்பாடி போலீசார், இவரது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரூ.15,000 மதிப்புள்ள நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.நாட்டு வெடிகளை இவரே தயாரித்து பதித்து வைத்து விற்பனை செய்து வந்தாரா? அல்லது வேறு யாரிடமாவது இருந்து வாங்கி விற்பனை செய்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 45 அடி உயரத்தில் திருமுருகனும், அறுபடை முருகன் சுவாமி
- 28 அடி உயர பஞ்சமுக அஷ்ட காலபைரவரும்
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த 10 வது கி.மீ. துாரத்தில், நாமக்கல் மாவட்ட எல்லையில் திம்மநாயக்கன்பட்டி வேப்பிலைக்குட்டை கிராமத்தில், 5 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ ஓம்சக்தி முருகன் சித்தர் பீடம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பிரத்தியங்கரா, காளி, வராகி ஆகிய முப்பெரும் தேவியர் வடிவில் 45 அடி உயரத்தில் எட்டுக்கை அம்மனும், மூலவராக ஆதிபராசக்தி அம்மனும், 45 அடி உயரத்தில் திருமுருகனும், அறுபடை முருகன் சுவாமிகளும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
28 அடி உயர பஞ்சமுக அஷ்ட காலபைரவரும், வராகமூர்த்தி, திருப்பதி வெங்கடாஜலபதி, உலகலந்த பெருமாள், லட்சுமி நரசிம்மர் ஆகிய சுவாமிகளுக்கு, தெப்பக் குளத்திற்கு நடுவே, 5 கோபுர கோயிலும், கன்னிமூல கணபதி, ஏழு சப்த கன்னிகள், காமதேனு கற்பக விருட்சாம்பிகை, அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன், குரு, பிரம்மா, விஷ்ணு சுவாமி கோயில்களும் இந்த சித்தர் பீடத்தில் அமைந்துள்ளன.இக்கோவில் பீடாதிபதி ஓம் சக்தி முருகன் சித்தர் சுவாமிகள், இமயமலை பிரதேசங்களில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட, சிவனின் கண் என போற்றப்படும், அருட்தன்மை கொண்ட ருத்ராட்ச மரத்தை இக்கோயில் தல விருட்சமாக வளர்க்க முடிவு செய்தார். 4 ஆண்டுக்கு முன் இமயமலை பகுதியில் இருந்து ஒரு ருத்ராட்ச மரக்கன்றை கொண்டு வந்து, சித்தர் பீடத்தில் பைரவர் கோயில் அருகே நட்டு வளர்த்து வந்தார்.இந்த மரக்கன்று தற்போது மரமாக வளர்ந்து, தற்போது கொத்துக் கொத்தாகக் ருத்ராட்சக் காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. இந்த ருத்ராட்ச மரம் குறித்து தகவலறிந்த பக்தர்கள், இக்கோயிலுக்கு சென்று ருத்ராட்ச மரத்தை வணங்கி வழிபடுவதோடு, ருத்ராட்சக் காய்களை ஆச்சர்யத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.
- இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.
- 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
ஆருத்ரா தரிசன விழா சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து முருகன் சன்னதி அருகே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டன. நள்ளிரவு 12.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, அன்னம், அரிசி மாவு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் காசி விஸ்வநாதர், குகை அம்பலவாணர், அம்மாப்பேட்டை சுப்பிரமணியர், மேச்சேரி பசுபதீசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர் .பெண்களுக்கு திருமஞ்சன கயிறு வழங்கப்பட்டது. பஞ்சமூர்த்திகள் விழாவும் நடந்தது.
நாமக்கலில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நடராஜருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் புறப்பட்டு துறையூர் ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு பிரசாதம் கோவில் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதயொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






