கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

புவியியல் மற்றும் சுரங்க துறை தனி வருவாய் ஆய்வாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினர்.
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டி கிரா மத்தில் சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை தனி வருவாய் ஆய்வாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினர். அப்போது அதன் டிரைவர் கீழே இறங்கி ஓடினார். லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து

தாரமங்கலம் காவல்

நிலையத்தில் ஒப்படைத்த னர். மேலும் இது தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com