என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் கார்மேகம் கரும்பு வயல்களில் ஆய்வு Collector carmecum survey in sugarcane fields"

    • விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்–படினை சாகுபடி
    • விவசாயிகளிடம் கரும்பினை மொத்தமாக கொள்முதல்

    எடப்பாடி:

    தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்கான கரும்புகளை கொள்முதல் செய்திடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்ப–னூர், வடக்கத்திக்காடு, ஓணாம் பாறையூர், மோளப்பாறை பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்–படினை சாகுபடி செய்துள்ளனர். இங்கு அறுவடைக்கு தயாராக உள்ள செங்குறும்புகளை தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்துள்ள கூட்டுறவு சங்கத்தினர், இப்பகுதி விவசாயிகளிடம் கரும்பினை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பூலாம்பட்டி அடுத்த கூடக்கல் பகுதியில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் கரும்பு வயல்களை ஆய்வு செய்து, அங்கு நடைபெற்று வரும் அறுவடை பணி மற்றும் கொள்முதல் விவரங்களை பார்வையிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கரும்புக்கு உரிய விலை கிடைக்கப் பெறுகிறதா? கொள்முதல் செய்யப்பட்ட தொகை எவ்வாறு வழங்கப்படுகிறது? உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது கூட்டுறவு கூடுதல் பதிவாளர் சிவமலர், இணைப்பதிவாளர் ரவிக்கு–மார் மற்றும் எடப்பாடி தாசில்தார் லெனின் பூலாம்பட்டி பேரூராட்சி தலை வர் அழகுதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×