என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ரெட்டிப்பட்டியில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

    சேலம் ரெட்டிப்பட்டியில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    • பழைய ரேஷன் கடை அருகே, ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல்
    • கர்நாடக பதிவு எண் கொண்ட மினி லாரி

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே ரெட்டிபட்டி அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ள பழைய ரேஷன் கடை அருகே, ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு நின்றிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.

    அதில், மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மினி லாரியையும், 7 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து, சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த லாரி யாருக்கு சொந்தமானது? அரிசி எங்கு ஏற்றப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×