என் மலர்
சேலம்
- சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- காடையாம்பட்டி முதல் நிலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மயின் வாகனன், கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டைக்கும், அங்கு பணியாற்றிய பொற்கொடி, காடையாம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காடையாம்பட்டி முதல் நிலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மயின் வாகனன், கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டைக்கும், அங்கு பணியாற்றிய பொற்கொடி, காடையாம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வீரகனூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சாமி, கடலூர் மாவட்டம் தொரப்பாடிக்கும், திருப்பூர் கொமரலிங்கம் பஞ்சாயத்து செயல் அலுவலர் கார்த்திகேயன் வீரகனூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட செயல் அலுவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 35) என்பவரை வாழப்பாடி போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த இவர், திடீரென தலைமறைவானார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி சங்கர் பார்க் அருகே, கடந்த 2010-ம் ஆண்டு மாணவி ஒருவரை காதலிக்க வேண்டுமென வற்புறுத்திய வாலிபரை, அந்த மாணவியின் சகோதரரும், அவரது நண்பரும் இணைந்து கொலை செய்தனர்.
இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 35) என்பவரை வாழப்பாடி போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த இவர், திடீரென தலைமறைவானார்.
இவரை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து முத்துகுமாரை வாழப்பாடி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- செயல் அலுவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காடையாம்பட்டி முதல் நிலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மயின் வாகனன், கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டைக்கும், அங்கு பணி யாற்றிய பொற்கொடி, காடையாம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வீரகனூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சாமி, கடலூர் மாவட்டம் தொரப்பா
டிக்கும், திருப்பூர் கொமர லிங்கம் பஞ்சாயத்து செயல் அலுவலர் கார்த்திகேயன் வீரகனூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட செயல் அலுவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- கொலையுண்ட மணி, டிரைவர் தொழிலை தவிர மரங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
- மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பெரியசோரகை மாட்டுக்காரன் வளவு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மணி (வயது 50). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு மணியிடம் பேசியுள்ளார். அதன்பிறகு மணியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
இதனிடைேய தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மணி 2 கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக மிதந்தார். இதையடுத்து தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலம் மணி உடலை மீட்டு பார்வையிட்டனர். மர்ம நபர்கள், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பாதி உடலை கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன.
கொலையுண்ட மணி, டிரைவர் தொழிலை தவிர மரங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சக தொழிலாளர்களுடன் சேர்ந்து, விலை உயர்ந்த மரங்களை தோட்டங்களுக்கு நேரடியாக சென்ற வாங்கி அதை கதவு, ஜன்னல் மற்றும் மர பொருள்கள் செய்ய அளவுக்கு ஏற்ப துண்டு துண்டாக வெட்டி லோடு, லோடாக லாரிகளில் ஏற்றி அனுப்பி வந்தார். இதில் பணம் மழை கொட்டியது.
இதில் ஏற்பட்ட போட்டி காரணமாகவே மணியை சக தொழிலாளர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஏனெனில் மரம் அறுக்கும் மிஷின் மூலம் மணியின் 2 கைகள் தனியாகவும், 2 கால்கள் தனியாகவும், உடலை 2 துண்டாகவும் அறுக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகத்தின்பேரில், மணியுடன் வேலை பார்த்து வந்த சக தொழிலாளர்கள் 3 பேரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.84 அடியாக உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு, நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 3,260 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 3,017 கன அடியாக சரிந்தது. இன்று காலை மேலும் நீர்வரத்து சரிந்து, 2,009 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த டிசம்பர் 29-ந் தேதி 120 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், கடந்த 10 நாட்களில் 5.16 அடி சரிந்துள்ளது. இன்று காலை 8 மணியளவில் அணையின் நீர்மட்டம் 114.84 அடியாக உள்ளது.
- சிறுமி திடீரென மயங்கி விழுந்ததில் பாட்டி அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
- வாலிபர் ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). பெற்றோரை இழந்த இவர், அன்னதானப்பட்டி பகுதிக்கு கூலிவேலைக்கு வந்தார். அப்போது 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தார். இதற்கிடையில் வாலிபர் ஆகாஷ் அடிக்கடி சிறுமியை சந்தித்துள்ளார். கடந்த 6-ந் தேதி சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இது பற்றி சிறுமியிடம் விவரத்தை கேட்டபோது, வாலிபர் ஆகாஷ், தன்னுடன் நெருங்கி பழகினார் எனவும், மேலும் அவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டார் எனவும் கண்ணீர் மல்க கூறினார்.
இது குறித்த புகாரின்பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, வாலிபர் ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருப்பதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் சார்பில் 3 மாத திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- மேலும் பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்த, 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாது காப்புத்திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உள்ள கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார வேலை செய்பவர், குழாய் பொறுத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், தச்சுவேலை போன்ற தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் சார்பில் 3 மாத திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்த, 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு எல் அன்ட் டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். ஒரு வார கால திறன் பயிற்சியில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி பெறுவோருக்கு தினமும் ரூ.800 வழங்கப்படும். இந்த பயிற்சி தொடர்பாக சேலம் கோரிேமட்டில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை அணுகி பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
- ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைகளிலும் அதிகப்படியான சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும்.
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு செய்ய மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலைய
எல்லைகளிலும் அதிகப்படியான சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். பழுதடைந்த கேமராக்களை சரி செய்தல் வேண்டும். போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகளிலும் கேமிராக்கள் பொருத்த பொது மக்க ளுக்கு அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் அதிக விபத்துக்கள் நடந்த இடங்களை கணக்கெடுத்து, அந்த இடங்களை போலீசார்
கள ஆய்வு செய்து, அங்கு
விபத்து தடுப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, புகை யிலைப் பொருட்கள், சந்துக் கடை களில் மது விற்பனை, கள்ளச் சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்டவற்றை ஒழிக்க
கடுமையான நடவடிக்கை கள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூடுதல் போலீஸ்
சூப்பிரண்டு கென்னடி, துணை போலீஸ் சூப்பி ரண்டுகள் விஜயக்குமார், ஆரோக்கியராஜ், சங்கீதா, ராமச்சந்திரன், ஹரிசங்கரி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
- விளைச்சலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக கறிவேப்பிலை இலவசமாக வழங்குவதில்லை.
- விலை உயர்வு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்:
கறிவேப்பிலை அன்றாட சமையல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இதனால் கிராமப்புறங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கும்போது கறிவேப்பிலை இலவசமாக கொடுப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால் தற்பொழுது விளைச்சலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக கறிவேப்பிலை இலவசமாக வழங்குவதில்லை.
சேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவாசல், ஆறுகளூர், சுற்றுவட்டார பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கறிவேப்பிலை விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் கறிவேப்பிலை சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது .
தற்பொழுது கார்த்திகை, மார்கழி, மாதங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக கறிவேப்பிலை செடிகளில் அஸ்வினி, செம்பேன், போன்ற நோய் தாக்குதல் அதிகமாக உள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ கறிவேப்பிலை 30 ரூபாய்க்கு விற்பனையானது. தற்பொழுது 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் வியாபாரிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.
இலவசமாக கொடுத்து வந்த கறிவேப்பிலை இன்று 100 ரூபாயை எட்டியது விவசாயிகளிடையே, வியாபாரிகளிடையே பொதுமக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மேட்டூர் அணைக்கு வரும் நீரின்அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
- நேற்று 116 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 115.45 அடியானது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 3,260 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 3,017 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றிலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் கால்வாயிலும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
அணைக்கு வரும் நீரின்அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 116 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 115.45 அடியானது.
- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரிய நெல்லிக்காய் விளைவிக்கப்படுகின்றன.
- சேலம் கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரிய நெல்லி வரத்து அதிகரித்துள்ளது.
அன்னதானப்பட்டி:
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரிய நெல்லிக்காய் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளைச்சல் செய்யப்பட்ட நெல்லிக்கனிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் சேலம் கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரிய நெல்லி வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் கடைவீதி, ஆனந்தா இறக்கம் மார்க்கெட், ஆற்றோரம் தெரு, பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வரத்து அதிகரித்து, பெரிய நெல்லிக்காய் விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகிறது. பெரிய நெல்லியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இதை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் இதனை பொதுமக்கள், பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனர். நெல்லிக்காய் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.70 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.
- இங்கிருந்து நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அன்னதானப்பட்டி:
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. இங்கிருந்து நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து, விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் லீ பஜார் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 முதல் 60 டன் வரை விற்பனைக்கு வந்தது. தற்போது வரத்து அதிகரித்து ஒரு நாளைக்கு 70 முதல் 80 டன் வரை விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து வியாபாரிகள் ரூ.20- ரூ.27- க்கு வாங்கிச் சென்று வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோல் சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் முழுவதும் விளைச்சல் செய்யப்பட்ட சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது . கடந்த சில நாட்களுக்கு முன்பு 20-25 டன் வரை சின்ன வெங்காயம் வரத்து இருந்தது. தற்போது சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து ஒரு நாளைக்கு 30 முதல் 35 டன் வரை விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.50- ரூ.65- க்கு வாங்கிச் சென்று வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
வெங்காயம் வரத்து அதிகரித்து வருவதால் லீ பஜார் மார்க்கெட்டில் விற்பனை களை கட்டி வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் தினமும் அதிகாலை முதலே வந்து தங்களுக்கு தேவையான அளவில் வெங்காயம் வாங்கிச் சென்று வருகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, தை , மாசி மாதங்களில் அடுத்தடுத்து வெங்காயம் வரத்து மேலும் அதிகரிக்கும். அப்போது விற்பனை இதை விட மும்முரமாக நன்றாக இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.






