என் மலர்
நீங்கள் தேடியது "பெரிய நெல்லிக்காய்"
- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரிய நெல்லிக்காய் விளைவிக்கப்படுகின்றன.
- சேலம் கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரிய நெல்லி வரத்து அதிகரித்துள்ளது.
அன்னதானப்பட்டி:
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரிய நெல்லிக்காய் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளைச்சல் செய்யப்பட்ட நெல்லிக்கனிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் சேலம் கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரிய நெல்லி வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் கடைவீதி, ஆனந்தா இறக்கம் மார்க்கெட், ஆற்றோரம் தெரு, பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வரத்து அதிகரித்து, பெரிய நெல்லிக்காய் விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகிறது. பெரிய நெல்லியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இதை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் இதனை பொதுமக்கள், பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனர். நெல்லிக்காய் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.70 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






