என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் லீ பஜார் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து அதிகரிப்பு
    X

    சேலம் லீ பஜார் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து அதிகரிப்பு

    • மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.
    • இங்கிருந்து நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அன்னதானப்பட்டி:

    இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. இங்கிருந்து நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து, விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் லீ பஜார் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 முதல் 60 டன் வரை விற்பனைக்கு வந்தது. தற்போது வரத்து அதிகரித்து ஒரு நாளைக்கு 70 முதல் 80 டன் வரை விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து வியாபாரிகள் ரூ.20- ரூ.27- க்கு வாங்கிச் சென்று வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதேபோல் சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் முழுவதும் விளைச்சல் செய்யப்பட்ட சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது . கடந்த சில நாட்களுக்கு முன்பு 20-25 டன் வரை சின்ன வெங்காயம் வரத்து இருந்தது. தற்போது சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து ஒரு நாளைக்கு 30 முதல் 35 டன் வரை விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.50- ரூ.65- க்கு வாங்கிச் சென்று வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    வெங்காயம் வரத்து அதிகரித்து வருவதால் லீ பஜார் மார்க்கெட்டில் விற்பனை களை கட்டி வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் தினமும் அதிகாலை முதலே வந்து தங்களுக்கு தேவையான அளவில் வெங்காயம் வாங்கிச் சென்று வருகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, தை , மாசி மாதங்களில் அடுத்தடுத்து வெங்காயம் வரத்து மேலும் அதிகரிக்கும். அப்போது விற்பனை இதை விட மும்முரமாக நன்றாக இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.

    Next Story
    ×