என் மலர்
சேலம்
- ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.
- இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என 2 ஏரிகள் உள்ளது.
ஏலம்
கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழைக்கு, 2 ஏரிகளும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். 2 ஏரியிலும் நாட்டு இன மீன்கள் அதிகளவில் உள்ளது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் 2 ஏரியிலும் மீன்பிடி உரிமை ஏலம் விடப்பட்டு வருகிறது.
பொதுபணித்துறைக்கு சொந்தமான 2 ஏரிகளிலும், ஓமலூர் வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன்பாசி குத்தகை விடப்பட்டது. அதன்படி குத்தகை தொகையாக பெரிய ஏரி சுமார் ரூ.2 லட்சத்திற்கும், சின்ன ஏரி சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கடந்த 2 ஆண்டுகள் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போராட்டம்
இந்தநிலையில், குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. அதனால், காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் ஏரியில் மீன் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 2 ஏரிகளின் மீன் பிடி உரிமைக்கான ஏலம் விடப்பட்டது. முன்னதாக காலையில் பெரிய ஏரிக்கு நடைபெற்ற ஏலத்தில் 8 பேர் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இதில், சுப்ரமணி என்பவர் 99 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். மாலையில் சின்னஏரிக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் திடீரென தாலுகா அலுவலகத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் தாசில்தார் வள்ளமுனியப்பன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது பொது மக்கள் கூறுகையில், இங்கு ஏலம் எடுக்கும் நபர்கள், வெளியே சென்று, அவர்கள் தனியாக ரூ. 20 லட்சத்திற்கும் மேல் ஏலம் விட்டு பணத்தை பாகம் பிரித்து கொள்கின்றனர்.
சுகாதார சீர்கேடு
அதனால், ஏலம் விடாமல் பொதுமக்கள் இலவசமாக மீன் பிடித்து உண்பதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், ஏரியில் மீன் பிடி உரிமை எடுக்கும் ஏலதாரர்கள், மீன் வளர்ப்புக்காக ஏரியில், இறைச்சி, குப்பை, காய்கறி கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். அதனால், தண்ணீர் வளம் பாதிக்கிறது, ஏரியில் துணி துவைத்து குளித்தால் கூட மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீன் பிடி ஏலம் நடத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
அமைதி கூட்டம் நடத்திய பிறகு மீண்டும் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.54 அடியாக உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2009 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1570 கன அடியானது. இன்று காலை மேலும் சரிந்து விநாடிக்கு 1,327 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.54 அடியாக உள்ளது.
- திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ரூ.2100 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
- இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன.
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு , கேபி கரடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் ( வயது 28). இரும்பு கிரில் பட்டறை உரிமையாளர். இவர் நேற்று அன்னதானப்பட்டி அகரமகால் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்கிற அய்யாவு (35) என்பவர் திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ரூ.2100 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அய்யாவு என்பவரை கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார்.
- நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தொட்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, விஜயலட்சுமி சேலம் சூரமங்கலம் அருகே ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியை வெட்டியுள்ளார்.
இதில் லேசான காயத்துடன் தப்பிய விஜயலட்சுமி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பெயரில் சூரமங்கலம் போலீசார், வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் .34 -க்கு உட்பட்ட புதுத்தெரு ஈசன் காம்ப்ளக்ஸ் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது.
- முன்னதாக தமிழகத்தின் பாரம்பரிய பெருமை களையும், தொன்மைமிக்க அடையாளங்களை பறைசாற்றும் வகையில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சேலம்:
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் .34 -க்கு உட்பட்ட புதுத்தெரு ஈசன் காம்ப்ளக்ஸ் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்களான பொங்கல்பானையுடன் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு ஆகிய பொருட்களை வழங்கினார்.
முன்னதாக தமிழகத்தின் பாரம்பரிய பெருமை களையும், தொன்மைமிக்க அடையாளங்களை பறைசாற்றும் வகையில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. எனது குப்பை, எனது பொறுப்பு, எனது நகரம் எனது பெருமை என்ற தூய்மை திட்டத்தின் கீழ் தூய்மையை வலியுறுத்தியும், தூய்மை இயக்கப் பணியில் மக்களை ஈடுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
புகையில்லா போகி, மாசு இல்லா போகியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. மேலும், போகி பண்டிகையால் ஏற்படும் புகை மாசுவை தவிர்க்க பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், வேலு சரவணனின் கடல் பூதம் என்ற தலைப்பில் நாடகமும் நடைபெற்றது.
இவ்விழாவில் அம்மாப்பேட்டை மண்டல குழுத்தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள் இளங்கோ, உதவி ஆணையாளர் கதிரேசன், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சுமதி மற்றும் தன்னார்வ அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- ஒரு கழுகு காலில் அடிபட்டு, எலும்பு முறிந்து காயமடைந்த நிலையில், கிடந்தது.
- பறக்க முடியாமல் கழுகு தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் ஒரு கழுகு காலில் அடிபட்டு, எலும்பு முறிந்து காயமடைந்த நிலையில், கிடந்தது. மேலும் பறக்க முடியா மல் கழுகு தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரர்கள் காய மடைந்த கழுகை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து வனத்துறையின ரிடம் அந்த கழுகு ஒப்படைக்கப்பட்டது.
- அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சங்ககிரி ஆர்.எஸ். கட்டுமான அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிக்கு சங்ககிரி அரசு மருத்துவமனை ஐ.சி.டி.சி ஆலோசகர் கோபால் தலைமை வகித்தார்.
சங்ககிரி:
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சென்னை - கன்னியாகுமரி தொழில் தடத் திட்டம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சங்ககிரி ஆர்.எஸ். கட்டுமான அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்ககிரி அரசு மருத்துவமனை ஐ.சி.டி.சி ஆலோசகர் கோபால் தலைமை வகித்தார். இதில் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சங்ககிரி நெடுஞ்சாலைத் துறை துணை கோட்ட பொறியாளர் தாரகேஸ்வரன், துணை பொறியாளர் தினகரன், ஏ.ஜி.இ.இ.எஸ் கள மேற்பணியாளர் தேவன், கட்டுமான பொறுப்பாளர் மற்றும் முதுநிலை மேலாளர் முத்துக்குமரன் மற்றும் கட்டுமான பணியாளர்கள் சுமார் 150 பேர் இதில் கலந்துகொண்டனர்.
- நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபா–ரம் செய்ய அனுமதி, அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் பெறும் நலத் திட்டங்கள் தடை இல்லாமல் கிடைக்க வேண்டும்.
- இதில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அனைத்து பொது தொழிலாளர் சங்கம் சார்பாக நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபா–ரம் செய்ய அனுமதி, அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் பெறும் நலத் திட்டங்கள் தடை இல்லாமல் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியு–றுத்தி, ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பொது தொழிளாலர் சங்க தலைவர் தனபால் தலைமையில் பேரணி நடைபெற்றது.
சங்க செயலாளர் ரகுராஜ் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். பேரணியை ஏற்காடு சித்ரா குணசேகரன் எம்.எல்.ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அனைத்து பொது தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பேரணி யில் கலந்து கொண்டனர்.
- பிரைட் காயர் என்ற பெயரில் தேங்காய் நார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
- வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய் நார்களை மொத்தமாக வாங்கி அதனை குடோனில் வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் பகுதி தர்மநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சையத். இவர் பிரைட் காயர் என்ற பெயரில் தேங்காய் நார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய் நார்களை மொத்தமாக வாங்கி அதனை குடோனில் வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை இவரது குடோனில் இருந்து, கரும்புகை கிளம்பியது. இதுகுறித்து அருகில் இருந்த வர்கள் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.சையத் சம்பவ
இடத்திற்கு வந்து பார்த்த போது, குடோன் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சையத், தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையி னருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து சேதமானதோடு, தேங்காய் நார் வைத்திருந்த குடோன் முழுவதும் சேதம் அடைந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் குடோனை இடித்து, தீ மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
சேலம் தர்ம நகர் பகுதி
யில், உரிய அனுமதி இல்லா மலும், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பாதுகாப்பு இல்லாமலும் இது போன்ற நிறைய தேங்காய் நார் மற்றும் கயிறு மார்க்கெட்டுகள் இயங்கி வருகிறது. அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற தீ விபத்துக்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் இதனை முறைப்படுத்த வேண்டும் எனவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட குடோனுக்கு மின் இணைப்பு ஏதும் இல்லாத நிலையில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது குறித்து, சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2019-ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
- பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் அருகில் உள்ள பெருமாள்மலை குன்று பகுதியில் 4 ஏக்கர் நிலத்தினை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் உட்பட்ட பாலகுட்டப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2019-ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், தொடக்கப்பள்ளி வளா
கத்திலேயே உயர்நி லைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாலகுட்டப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் பாலகுட்டப்பட்டி, மரத்து குட்டை, மறவன்குரை, அல்லையனூர், மலைய னூர், ஓலைப்பட்டி, கரிசல்பட்டி, கலர்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 260 மாணவ மாணவி
கள் கல்வி பயின்று வரு கின்றனர். இந்தநிலையில், பள்ளிக்கு புதிய கட்டிடம்
கட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் அருகில் உள்ள பெருமாள்மலை குன்று பகுதியில் 4 ஏக்கர் நிலத்தினை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயரில் பள்ளி கல்வித்துறைக்கு நிலமாற்றம் செய்ய ஓமலூர் வட்டாட்சியர் மற்றும் மேட்டூர் கோட்டாட்சியர் ஆகியோர் நில தணிக்கை மற்றும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், புவியியல் மற்றும் சுரங்க துறையின் தடையின்மை சான்று பெறப்பட்டு, ஆய்வறிக்கை மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலை யில், பெருமாள் மலை பகுதி நிலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயரில் பள்ளிக்கல்வி துறைக்கு நில மாற்றம் செய்ய, ஊராட்சி மன்றம் தீர்மானம் வழங்க கோரி, அப்பகுதி மக்கள், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவல கத்திற்கு வந்து ஊராட்சி தலைவர் மற்றும் செயலரிடம் மனு கொடுத்தனர்.
உடனடியாக தீர்மா னத்தை நிறைவேற்றி கொடுத்து பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறும்போது, கிராம சபை கூட்டம் நடைபெறும் போது ஊராட்சி உறுப்பி
னர்கள், கிராம மக்கள் முன்னி லையில், கிராம மக்களின் கருத்துக்களை கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
- கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் தள்ளாத வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம்.
- கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டேனீஸ்பேட்டை பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 90). இவருடைய மனைவி பொன்னம்மாள் ( 82).
இவர், தன்னுடைய மகள் கமலா (60) என்பவருடன் கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பழனியப்பனுக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டாார்.
எனது கணவர் ஏற்கனவே குப்பாயி (70) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த தொடர்பை கைவிடுமாறு நாங்கள் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.
தற்போது 3-வதாக பழனியம்மாள் (70) என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். எங்களுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை கணவர், ஆசைநாயகி பழனியம்மாளுக்கு எழுதி வைத்துள்ளார்.
மேலும், நாங்கள் பேரனுடன் வசித்து வந்த வீட்டை இடித்து விட்டு எங்களை மிரட்டுகிறார்.
கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் இந்த வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம். கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.
இவ்வாறு அவர் அதில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
- மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை அதேஅளவில் நீடித்தது. இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3017 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 2,009 கனஅடியானது.
இன்று காலை நிலவரப்படி மேலும் சரிந்து, விநாடிக்கு 1,570 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 114.84 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 114.20 அடியாக சரிந்தது.






