என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village People’s Petition கிராம மக்கள் மனு"

    • இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2019-ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
    • பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் அருகில் உள்ள பெருமாள்மலை குன்று பகுதியில் 4 ஏக்கர் நிலத்தினை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் உட்பட்ட பாலகுட்டப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2019-ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், தொடக்கப்பள்ளி வளா

    கத்திலேயே உயர்நி லைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், பாலகுட்டப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் பாலகுட்டப்பட்டி, மரத்து குட்டை, மறவன்குரை, அல்லையனூர், மலைய னூர், ஓலைப்பட்டி, கரிசல்பட்டி, கலர்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 260 மாணவ மாணவி

    கள் கல்வி பயின்று வரு கின்றனர். இந்தநிலையில், பள்ளிக்கு புதிய கட்டிடம்

    கட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் அருகில் உள்ள பெருமாள்மலை குன்று பகுதியில் 4 ஏக்கர் நிலத்தினை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயரில் பள்ளி கல்வித்துறைக்கு நிலமாற்றம் செய்ய ஓமலூர் வட்டாட்சியர் மற்றும் மேட்டூர் கோட்டாட்சியர் ஆகியோர் நில தணிக்கை மற்றும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், புவியியல் மற்றும் சுரங்க துறையின் தடையின்மை சான்று பெறப்பட்டு, ஆய்வறிக்கை மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலை யில், பெருமாள் மலை பகுதி நிலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயரில் பள்ளிக்கல்வி துறைக்கு நில மாற்றம் செய்ய, ஊராட்சி மன்றம் தீர்மானம் வழங்க கோரி, அப்பகுதி மக்கள், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவல கத்திற்கு வந்து ஊராட்சி தலைவர் மற்றும் செயலரிடம் மனு கொடுத்தனர்.

    உடனடியாக தீர்மா னத்தை நிறைவேற்றி கொடுத்து பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறும்போது, கிராம சபை கூட்டம் நடைபெறும் போது ஊராட்சி உறுப்பி

    னர்கள், கிராம மக்கள் முன்னி லையில், கிராம மக்களின் கருத்துக்களை கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    ×