என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் நார் குடோனில் பயங்கர தீ விபத்து
    X

    தீ விபத்து ஏற்பட்ட கயிறு குடோனை படத்தில் காணலாம். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த காட்சி.

    தேங்காய் நார் குடோனில் பயங்கர தீ விபத்து

    • பிரைட் காயர் என்ற பெயரில் தேங்காய் நார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
    • வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய் நார்களை மொத்தமாக வாங்கி அதனை குடோனில் வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் பகுதி தர்மநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சையத். இவர் பிரைட் காயர் என்ற பெயரில் தேங்காய் நார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய் நார்களை மொத்தமாக வாங்கி அதனை குடோனில் வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை இவரது குடோனில் இருந்து, கரும்புகை கிளம்பியது. இதுகுறித்து அருகில் இருந்த வர்கள் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.சையத் சம்பவ

    இடத்திற்கு வந்து பார்த்த போது, குடோன் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சையத், தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையி னருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து சேதமானதோடு, தேங்காய் நார் வைத்திருந்த குடோன் முழுவதும் சேதம் அடைந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் குடோனை இடித்து, தீ மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சேலம் தர்ம நகர் பகுதி

    யில், உரிய அனுமதி இல்லா மலும், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பாதுகாப்பு இல்லாமலும் இது போன்ற நிறைய தேங்காய் நார் மற்றும் கயிறு மார்க்கெட்டுகள் இயங்கி வருகிறது. அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற தீ விபத்துக்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் இதனை முறைப்படுத்த வேண்டும் எனவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சம்பந்தப்பட்ட குடோனுக்கு மின் இணைப்பு ஏதும் இல்லாத நிலையில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது குறித்து, சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×