மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் கைது

மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார். நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.
மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் கைது
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தொட்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, விஜயலட்சுமி சேலம் சூரமங்கலம் அருகே ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியை வெட்டியுள்ளார்.

இதில் லேசான காயத்துடன் தப்பிய விஜயலட்சுமி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பெயரில் சூரமங்கலம் போலீசார், வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com