search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளுடன்சேலத்தில் களைகட்டிய பொங்கல் திருவிழா
    X

    விழாவில் மேயர் ராமச்சந்திரன் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை வழங்கியபோது எடுத்தபடம்.

    ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளுடன்சேலத்தில் களைகட்டிய பொங்கல் திருவிழா

    • அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் .34 -க்கு உட்பட்ட புதுத்தெரு ஈசன் காம்ப்ளக்ஸ் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • முன்னதாக தமிழகத்தின் பாரம்பரிய பெருமை களையும், தொன்மைமிக்க அடையாளங்களை பறைசாற்றும் வகையில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் .34 -க்கு உட்பட்ட புதுத்தெரு ஈசன் காம்ப்ளக்ஸ் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்களான பொங்கல்பானையுடன் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு ஆகிய பொருட்களை வழங்கினார்.

    முன்னதாக தமிழகத்தின் பாரம்பரிய பெருமை களையும், தொன்மைமிக்க அடையாளங்களை பறைசாற்றும் வகையில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. எனது குப்பை, எனது பொறுப்பு, எனது நகரம் எனது பெருமை என்ற தூய்மை திட்டத்தின் கீழ் தூய்மையை வலியுறுத்தியும், தூய்மை இயக்கப் பணியில் மக்களை ஈடுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    புகையில்லா போகி, மாசு இல்லா போகியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. மேலும், போகி பண்டிகையால் ஏற்படும் புகை மாசுவை தவிர்க்க பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், வேலு சரவணனின் கடல் பூதம் என்ற தலைப்பில் நாடகமும் நடைபெற்றது.

    இவ்விழாவில் அம்மாப்பேட்டை மண்டல குழுத்தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள் இளங்கோ, உதவி ஆணையாளர் கதிரேசன், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சுமதி மற்றும் தன்னார்வ அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×