என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rare Eagle Rescue"

    • ஒரு கழுகு காலில் அடிபட்டு, எலும்பு முறிந்து காயமடைந்த நிலையில், கிடந்தது.
    • பறக்க முடியாமல் கழுகு தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் ஒரு கழுகு காலில் அடிபட்டு, எலும்பு முறிந்து காயமடைந்த நிலையில், கிடந்தது. மேலும் பறக்க முடியா மல் கழுகு தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரர்கள் காய மடைந்த கழுகை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து வனத்துறையின ரிடம் அந்த கழுகு ஒப்படைக்கப்பட்டது. 

    ×