வீட்டில் பதுக்கி நாட்டு வெடிகள் விற்பனை செய்தவர் கைது

முத்தம்பட்டி பகுதியில் நேற்று அதிரடி சோதனைவீட்டில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை
வீட்டில் பதுக்கி நாட்டு வெடிகள்  விற்பனை செய்தவர் கைது
Published on

வாழப்பாடி

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்ப டுவதாக, வாழப்பாடி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்த பாரத் (வயது 43) என்பவர், அனுமதியின்றி வீட்டில் நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த வாழப்பாடி போலீசார், இவரது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரூ.15,000 மதிப்புள்ள நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.நாட்டு வெடிகளை இவரே தயாரித்து பதித்து வைத்து விற்பனை செய்து வந்தாரா? அல்லது வேறு யாரிடமாவது இருந்து வாங்கி விற்பனை செய்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com