என் மலர்tooltip icon

    சேலம்

    • தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட 18 நல வாரியங்கள் ஏற்ப டுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • 18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ள அனைத்து தொழில் செய்யும் தொழிலாளர்களும் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசார தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களின் பணிநிலைமை களை ஒழுங்குப்படுத்தவும், அவர்களுக்கு சமூக பாது காப்பு அளிக்கவும் தமிழ்நாடு அரசு 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணிநி லைமைகள் ஒழுங்குப்படுத்து தல்) சட்டத்தினை இயற்றி, தற்போது தமிழ்நாடு கட்டு மானத் தொழிலாளர்கள் நல வாரியம், அமைப்புசார தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட 18 நல வாரியங்கள் ஏற்ப டுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில், 18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ள அனைத்து தொழில் செய்யும் தொழிலாளர்களும் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.

    2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள் அனைத்து இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

    அரசின் திட்டங்கள் அனைத்தும் உண்மையான தொழிலாளர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும், இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள தொழிலா ளர்களின், தொழிலின் உண்மை தன்மை அறியும் பொருட்டும், சேலம் தொழி லாளர் இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சேலம் தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கீதா, இணைந்து சேலம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இக்கள ஆய்வின்போது தொழிலா ளர்களிடம் அவர்கள் செய்யும் தொழில் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டது. உண்மையான தொழில் செய்யும் தொழிலா ளர்களுக்கு, உறுப்பினர் பதிவு அடையாள அட்டை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இணை யதள பதிவில் குறிப்பிட்ட, தொழில் செய்யாத தொழி லாளர்களின் இணையதள பதிவு விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு, உண்மையான தொழில் செய்யாத தொழி லாளர்களுக்கு பணிச்சான்று வழங்கிய தொழிற்சங்க பிரதிநிதிகள் மீது சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்ச ரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர்.

    சேலம்:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வரு கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர். இதற்கான சேலம் மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாண வர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், கெங்க வல்லி, கொளத்தூர், சங்க கிரி உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் நீட் தேர்வை எழுதினர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5000 பேர் தேர்வு எழுதினர். மாணவ, மாணவிகள், ஹால்டிக்கெட்டில் உள்ள படி குறிப்பட்ட நேரத்தில் வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம்போல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடைபெற்றது.

    • சேலம் கோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சேலம்:

    அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.

    வேட்பு மனு தாக்கலின்போது தன்னுடைய தேர்தல் பிராமண பத்திரத்தில் ரூ.1 கோடி அளவிற்கு சொத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை குறைத்து காட்டியதாக, தேனி மாவட்ட தி.மு.க முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் கடந்த 2016-ம்ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் தனக்கு ரூ.3.16 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்த பழனிசாமி, 2021 தேர்தலில் தனது சொத்து மதிப்பில் ரூ.1 கோடிக்கு மேல் குறைத்து காட்டியுள்ளார். எனவே சொத்து விவரங்களை மறைத்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

    இந்தப் புகார் மீதான வழக்கு விசாரணை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 ல் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கை பொதுநல வழக்காக கருதி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை எதிர்த்து சேலம் கோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புகார்தாரர் மிலானி, தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல எனவும், வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. ஓராண்டு கால அவகாசத்துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு தேர்தல் தொடர்பானது என்றும், விசாரணைக்கு உகந்ததில்லை என்றும், இதனால் சேலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு கடந்த 4-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு கூடுதல் வக்கீல் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து நீதிபதி விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 125 ஏ தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வது. 125 ஏ (1) பிரிவு 33 ஏ இன் துணைப் பிரிவு தொடர்பான தகவல்களை வழங்கத் தவறியது, 125 (2) தனக்குத் தெரிந்த அல்லது தவறானது என்று நம்புவதற்குக் காரணமுள்ள தவறான தகவலைத் கொடுப்பது. 125(3) பிரிவு 33-ன் துணைப்பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அவரது வேட்புமனுத்தாளில் அல்லது 33 ஏ இன் துணைப்பிரிவு 2-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய அவரது வாக்குமூலத்தில், ஏதேனும் தகவலை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதனிடையே எடப்பாடி பழனிசாமி மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் வழக்குப்பதிவு செய்து தினமும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தினமும் ஒரே நாள் என்பதால் விவரங்கள் ஏதும் தாக்கல் செய்யப்படாததால் அடுத்த விசாரணை நாளான ஜூன் 6-ம் தேதி அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறும், அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நீர் வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
    • நேற்று 102.25 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 102.54 அடியாக உயர்ந்தது.

    மேட்டூர்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலையில் விநாடிக்கு 6,595 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

    இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 6,295 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    நீர் வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 102.25 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 102.54 அடியாக உயர்ந்தது.

    • கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
    • 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து பருப்பு, கோதுமை மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    • கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார், நேற்று நள்ளிரவு கன்னங்குறிச்சி சின்ன முனியப்பன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • டாரஸ் லாரியை பள்ளிப்பாளையத்தில் இருந்து திருடி வந்த போது, வழி தெரியாமல் சின்ன முனியப்பன் கோவில் அருகே நின்றிருந்தபோது, போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார், நேற்று நள்ளிரவு கன்னங்குறிச்சி சின்ன முனியப்பன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கு நின்றிருந்த ஒரு டாரஸ் லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டு, லாரிக்குள் இருந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் கோரமங்களா ராஜேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்த பாஷா மகன் முகமது உரில்லா (வயது 37) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் அந்த டாரஸ் லாரியை பள்ளிப்பாளையத்தில் இருந்து திருடி வந்த போது, வழி தெரியாமல் சின்ன முனியப்பன் கோவில் அருகே நின்றிருந்தபோது, போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பள்ளிபாளையம் போலீசார் சேலத்திற்கு வந்து லாரியை பறிமுதல் செய்து, முகமதுவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    பிடிபட்ட டாரஸ் லாரி, நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. போலீசார் பிடிபட்ட வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பேரணி இன்று காலை சேலத்தில் நடந்தது.
    • சேலம் ஐந்து ரோட்டில் தொடங்கிய பேரணிக்கு சேலம் மாவட்ட துணை மேலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.

    சேலம்:

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பேரணி இன்று காலை சேலத்தில் நடந்தது. சேலம் ஐந்து ரோட்டில் தொடங்கிய பேரணிக்கு சேலம் மாவட்ட துணை மேலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.

    தீயணைப்பு அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார். இதில் ஐ.ஓ.சி.எல். எல்.பி.ஜி. கியாஸ் கோவை மண்டல மேலாளர் பிரியா ரெக்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். சேலம் 5 ரோட்டில் தொடங்கிய பேரணி ஸ்டேட் பேங்க் காலனி வரை சென்று, மீண்டும் 5 ரோட்டில் நிறைவு பெற்றது.

    இதில் எல்.பி.ஜி. கேஸ் விநியோகஸ்தர்கள் மற்றும் டெலிவரி மேன்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    • சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி.
    • அங்கு 2 நாட்கள் பணிபுரிந்த நிலையில், ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

    சேலம்:

    சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி. இவர் இன்று தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது மகன் சீதாராமன், சவுதி அரேபியாவில் ரியாத் என்ற பகுதிக்கு பெட்ரோல் என்ஜினீயர் பணிக்காக, கடந்த திங்கட்கிழமை சேலத்தில் இருந்து மும்பை வழியாக சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

    அங்கு 2 நாட்கள் பணிபுரிந்த நிலையில், ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அதில் எனது மகன் உட்பட 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

    மகன் சவுதி அரேபியாவுக்கு சென்று ஒரு வாரத்திற்குள்ளே தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் நேற்று தான் எங்களுக்கு தெரியவந்தது.

    எனது மகன் உடல் எப்போது தமிழ்நாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை. எனவே மாவட்ட கலெகடர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எனது மகனின் உடலை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.
    • பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). இவருடைய முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால், 2-வது திருமணம் செய்து உள்ளார்.

    பிரபல ரவுடியான ரஞ்சித்குமார், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த அவர் 2-வது மனைவி பிரியாவுடன், மாசிநா யக்கன்பட்டியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி உடையாப்பட்டி பகுதியில், ரஞ்சித்குமார் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், ரஞ்சித்குமாரின் முதல் மனைவிக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் ரஞ்சித்குமாரை விட்டு பிரிந்து தற்போது கள்ளக்கா தலனுடன் வசித்து வருகிறார். இதனால் ரஞ்சித்குமா ருக்கும், முதல் மனைவியுடன் வசித்து வருபவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இந்த நிலையில் ரவுடி ரஞ்சித்குமார் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக, அவருடை நண்பர்க ளான சேலம் அம்பாள் ஏரிரோடு பகுதியை சேர்ந்த மகி என்கிற மகேந்திர பூபதி (23), ஓமலூரை சேர்ந்த புகழேந்தி (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அம்மாபேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இக்கொலையில் தொடர்பு டைய மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, திரா விட மாடல் என்பது காலா வதியான கொள்கை என கருத்து தெரிவித்திருந்தார்.
    • தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, திரா விட மாடல் என்பது காலா வதியான கொள்கை என கருத்து தெரிவித்திருந்தார்.

    இதற்கு தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில், காவல்துறை உதவி மையம் முன்பாக நேற்று மதியம் திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி படத்தை வைத்து செருப்பு மாலை அணி விக்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், உடனடியாக அந்தப் படத்தை அப்புறப்ப டுத்தினர். மேலும் இதுகு றித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, ஆளுநர் ரவியின் படம் அவமதிக்கப் பட்டது. குறித்து அறிந்து, சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சண்முகநாதன் தலைமை யில், வாழப்பாடி பஸ் நிலையம் அருகே நேற்று மாலை பா.ஜ.க.வினர் திரண்டனர்.

    ஆளுநர் படம் அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த செயலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வா கியை கைது செய்ய வலியு றுத்தியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், ஆளுநர் படத்தை அவம திப்பு செய்த நபர் மீது நட வடிக்கை எடுப்பதாகக்கூறி பா.ஜ.க.வினரை சமாதானம் செய்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கொளத்தூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • ராஜா என்ற வெல்டிங் தொழிலாளி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணவாடியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வ தற்காக, ஈரோடு பழையபா ளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற வெல்டிங் தொழிலாளி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணவாடியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று திருவிழா முடிந்த நிலையில், பண்ணவாடி பரிசல் துறை பகுதிக்கு சென்ற அவர், காவிரி ஆற்றில் தனது நண்பர்க ளுடன் நீராடினார். மற்ற வர்கள் கரைக்கு வந்த நிலையில், ராஜா நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவருடைய நண்பர்கள், மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரில் மூழ்கி ராஜாவை தேடினர்.

    இரவு வெகு நேரத்துக்கு பின்னர் ராஜா பிணமாக மீட்கப்பட்டார். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    ராஜாவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஜனனி என்ற மகளும், ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். தந்தை நீரில் மூழ்கி இறந்த தகவல் அறிந்ததும் அவர்கள் கதறி துடித்தனர். 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தந்தை பலியான சம்பவம் அவர்களது உறவினர்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏற்காட்டில் கடந்த 1894-ம் ஆண்டு கட்டப்பட்ட போலீஸ் நிலையம் பழுத டைந்து காணப்பட்டது.
    • இந்த போலீஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிய போலீஸ் நிலையம் கட்ட, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப் பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 1894-ம் ஆண்டு கட்டப்பட்ட போலீஸ் நிலையம் பழுத டைந்து காணப்பட்டது. இந்த போலீஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிய போலீஸ் நிலையம் கட்ட, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப் பட்டது.

    இந்த நிலையில், உள்ளூர் சமூக ஆர்வலர்கள், வர லாற்று சின்னமாக கருதப்ப டும் இந்த கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த கட்டிடம் இடிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், பழைய கட்டிடத்திற்கு அருகிலேயே புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாழ டைந்த நிலையில் காணப் பட்ட பழைய போலீஸ் நிலைய கட்டிடம், ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன் முயற்சியால் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

    இதனால் 129 வரு டத்திற்கு முன்பு கட்டப்பட்டு பழைய போலீஸ் நிலைய கட்டிடம், தற்போது மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள் ளது. இந்த கட்டிடத்தை மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் நேற்று திறந்து வைத்தார். மேலும் இந்த போலீஸ் நிலையத்தை சுற்றுலா பயணிகளின் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போலீஸ் நிலையத்தின் உள்ளே 2 கைதிகள் அறை, ஒரு துப்பாக்கி பாதுகாப்பு அறை, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறை உள்ளது. வரலாற்று சின்ன மாக கருதப்படும் இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. இந்த நிகழ்சசியில் சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல் நாயகி, ஏற்காடு போலீசார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

    ×