search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police station building"

    • ஏற்காட்டில் கடந்த 1894-ம் ஆண்டு கட்டப்பட்ட போலீஸ் நிலையம் பழுத டைந்து காணப்பட்டது.
    • இந்த போலீஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிய போலீஸ் நிலையம் கட்ட, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப் பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 1894-ம் ஆண்டு கட்டப்பட்ட போலீஸ் நிலையம் பழுத டைந்து காணப்பட்டது. இந்த போலீஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிய போலீஸ் நிலையம் கட்ட, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப் பட்டது.

    இந்த நிலையில், உள்ளூர் சமூக ஆர்வலர்கள், வர லாற்று சின்னமாக கருதப்ப டும் இந்த கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த கட்டிடம் இடிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், பழைய கட்டிடத்திற்கு அருகிலேயே புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாழ டைந்த நிலையில் காணப் பட்ட பழைய போலீஸ் நிலைய கட்டிடம், ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன் முயற்சியால் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

    இதனால் 129 வரு டத்திற்கு முன்பு கட்டப்பட்டு பழைய போலீஸ் நிலைய கட்டிடம், தற்போது மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள் ளது. இந்த கட்டிடத்தை மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் நேற்று திறந்து வைத்தார். மேலும் இந்த போலீஸ் நிலையத்தை சுற்றுலா பயணிகளின் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போலீஸ் நிலையத்தின் உள்ளே 2 கைதிகள் அறை, ஒரு துப்பாக்கி பாதுகாப்பு அறை, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறை உள்ளது. வரலாற்று சின்ன மாக கருதப்படும் இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. இந்த நிகழ்சசியில் சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல் நாயகி, ஏற்காடு போலீசார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

    ரூ.59.66 லட்சம் மதிப்பீட்டில் திருத்தங்கல் புதிய காவல் நிலையம் கட்டும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

    சிவகாசி:

    திருத்தங்கல் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தரைத்தளம் மற்றும் முதல்தளம்; என 2 தளங்களை உள்ளடக்கி 249.34 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.59.66 லட்சம் மதிப்பீட்டில் திருத்தங்கல் புதிய காவல் நிலையம் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    காவல் நிலையக் கட்டிடத்தில் 110.41 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத் தளமும் 113.05 சதுர மீட்டர் பரப்பளவில் முதல்தளமும் அமைய உள்ளது. புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலைய கட்டிடத்தின் தரை தளத்தில் வரவேற்பு அறையும், காவல் ஆய்வாளர் அறையும், கணினி அறையும், நிலைய எழுத்தர் அறையும், கைதி அறை (ஆண் மற்றும் பெண்)களும் மற்றும் ஆயுத வைப்பறையும் அமைய உள்ளன.

    முதல்தளத்தில் உதவி ஆய்வாளர் அறையும் ஓய்வு அறை (ஆண் மற்றும் பெண்)யும், பொருள் வைப்பறையும், பதிவேடு அறை மற்றும் விசாரணை அறையும் அமைய உள்ளது.

    இந்த புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை நடை பெற்றது. அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை செய்து கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன், டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சீனிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் பொன். சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரமணா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×