என் மலர்
சேலம்
- கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.
- சேலம் லைன் மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர்.
சேலம்:
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடி வடைகிறது.
இதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கர்நாடக போலீசார் மற்றும் துணை ராணுவம் பாது காப்பு பணீயில் ஈடுபட்டு உள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் கோவை மேற்கு மண்டல காவல்துறையி லிருந்து 210 போலீஸாரும், 60 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் நேற்று சேலம் லைன் மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர்.
- பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
- நேற்று மாலையில் பெய்த மழை முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது.
சேலம்:
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்–களுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
சேலத்தில் கடந்த சில நாட்களாக 96 முதல் 98 பாரன்ஹீட் வெயில் நிலவியது. இந்த கோடை வெயிலினால் பொதுமக்கள், வீடுகளில் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் வெப்ப மிகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. பகலில் வெப்பமாக இருந்தாலும் இரவில் குளிர்ந்த காற்றும், சாரல் மழையாகவும் இருக்கிறது. நேற்று மாலையில் பெய்த மழை முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சேலம், ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், அயோத்தியாப்–பட்டணம், வாழப்பாடி, காடையாம்பட்டி, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. சாலைகள், தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து இன்று காலையில் வானம் மேக மூட்டத்துடனே காணப்படுகிறது. இந்த மழையால் விவசாயி–கள் மகிழ்ச்சி அடைந்துள்ள–னர். விளை நிலங்களில் சாகு–படி செய்துள்ள பயிர்களுக்கு இந்த மழை சற்று உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விபரம் வருமாறு:-
கரியகோவில் -55, ஆணைமடுவு-28, தலைவாசல்- 19, ஆத்தூர்-16, ஏற்காடு-15.6, பெத்தநாயக்கன்பாளையம் -13, சேலம்-12.6, வீரகனூர்-9, காடையாம்பட்டி -8, தம்மம்பட்டி-7, ஓமலூர்-7, கெங்கவல்லி-5, மேட்டூர்-3.2, எடப்பாடி-3, சங்ககிரி-2.2 மீல்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
- முத்துசாமி (வயது 25). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார்.
- திப்பம்பட்டி கிராமத்திற்கு வந்த இவர் நேற்று காலை வீட்டில் மின்விளக்கு எரியாததால் அதனை பழுதுபார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 25). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திப்பம்பட்டி கிராமத்திற்கு வந்த இவர் நேற்று காலை வீட்டில் மின்விளக்கு எரியாததால் அதனை பழுதுபார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் இவர் மயக்கம் அடைந்தார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். முத்துசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். முத்துசாமி உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி மற்றும் வாழப்பாடி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- வாழப்பாடி பேரூராட்சிக்கு நேற்று திடீரென வந்த தமிழக பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா, இந்த பணிகளை ஆய்வு செய்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி மற்றும் வாழப்பாடி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வாழப்பாடி பேரூராட்சிக்கு நேற்று திடீரென வந்த தமிழக பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா, இந்த பணிகளை ஆய்வு செய்தார். முக்கியத்துவம் வாய்ந்த இரு திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, சேலம் மண்டல உதவி இயக்குநர் கணேஷ்ராம், செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்டன், கணேசமூர்த்தி, வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், உதவி பொறியாளர் தினேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் மாதம் 3-ந் தேதி முடிவடைந்தது.
- சேலம் மாவட்டத்தில் 155 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
சேலம்:
தமிழ்நாட்டில் 2022-2023-ம் கல்வியாண்டு, பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் மாதம் 3-ந் தேதி முடிவடைந்தது.
155 தேர்வு மையங்கள்
சேலம் மாவட்டத்தில் 155 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காக வும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டது.
இத்தேர்வு மையங்களில் மாணவிகள் 19 ஆயிரத்து 528 பேரும், மாணவர்கள் 17 ஆயிரத்து 733 பேரும் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதினார்கள். பின்னர் 10-ந்தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி 24 -ந்தேதி நிறைவடைந்தது.
பிளஸ்-2 பொது தேர்வு முடிவு வெளியீடு
இதனை தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவை வெளியிட்டது.
இதில் சேலம் மாவட்டத்தில் மாணவிகள் 18 ஆயிரத்து 809 பேர், மாணவர்கள் 16,300 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 37 ஆயிரத்து 261 ேபர் தேர்வு எழுதியதில் 35109 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 94.22 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும்.
மாவட்டத்தில் 2 ஆயிரத்து 152 ேபர் தேர்ச்சி பெறவில்லை. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் ேபர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.
மகிழ்ச்சி
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிக்கூடத்துக்கு சென்று ஒவ்வொரு படத்திலும் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளோம் போன்ற மதிப்பெண் பட்டியலை பார்வையிட்டனர். பலர் செல்போன், கனினி வழியாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் தங்களது மதிப்பெண் பட்டியலை பார்த்தனர்.
தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தும், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.
- தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படு கிறது.
- பதவி உயர்வு மற்றும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படு கிறது. அத்துடன் பதவி உயர்வு மற்றும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டிற் கான கலந்தாய்வு இன்று (8-ந்தேதி) தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டி ருந்தது. மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 3-ந்தேதி வரை அதற்கான விண்ணப்பங்கள் நேரிலும், எமிஸ் மூலமாகவும் பெறப்பட்டன.
தொடர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களின் முன்னு ரிமை பட்டியல், மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று ெதாடங்க இருந்த கலந்தாய்வு திடீர் ஒத்தி வைக்கப்பட்டுள் ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு 2022-2023-ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்க ளுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக இந்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மணிமேகலை (வயது 28). கரகாட்டம் ஆடும் கலைஞரான இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது.
- இதனால் கரகாட்டத்திற்கு சென்று ஆட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் சுண்ணாம்பு சூலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மணிமேகலை (வயது 28). கரகாட்டம் ஆடும் கலைஞரான இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கரகாட்டத்திற்கு சென்று ஆட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த மணிமேகலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீஸ் சார் மணிமேகலையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டின் முன்புறம் வாரசந்தை விரிவாக்க பணிகள் நடக்கிறது. அதற்காக இவர் வீட்டின் அருகே பள்ளம் தோண்டினர்.
- அதற்கு பாதுகாப்பாக தடுப்பு அரண் அமைக்காத காரணத்தால் அவரின் மனைவி மகாலஷ்மி(57) வீட்டின் வெளியே வந்த போது மண் சறுக்கி பள்ளத்தில் விழுந்தார்.
காகாபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டி 16-வது வார்டில் வசிப்பவர் மாரியப்பன்(வயது 64) இவர் 16-வது வார்டு தி.மு.க. அவை தலைவராக உள்ளார்.
இந்நிலையில் இவர் வீட்டின் முன்புறம் வாரசந்தை விரிவாக்க பணிகள் நடக்கிறது. அதற்காக இவர் வீட்டின் அருகே பள்ளம் தோண்டி னர்.
ஆனால் அதற்கு பாதுகாப்பாக தடுப்பு அரண் அமைக்காத காரணத்தால் அவரின் மனைவி மகாலஷ்மி(57) வீட்டின் வெளியே வந்த போது மண் சறுக்கி பள்ளத்தில் விழுந்தார். இதனால் தலையில் பலத்த அடிபட்டி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபற்றி மாரியப்பன் கூறுகையில், நகராட்சி நிர்வாகத்தினர் என் வீட்டு வாசலில் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் இணைப்பு செல்லாதவாறு ஜே.சி.பி.,மூலம் இடித்து அகற்றி விட்டனர். இதனால் நாங்கள் இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்து முறை யிட்டோம்.
போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் என் மனைவி தலையில் பலத்த அடிபட்டு 15 தையல் போடப்பட்டு தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- ஏற்காட்டில், பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது.
- ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றடைந்து.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பொன் ரவி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றடைந்து. காந்தி பூங்காவில் நடந்த கூட்டத்தில் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் வரவேற்று பேசினார்.
சங்க செயலாளர் ரகுராஜ் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் பேசினார். நிறைவாக சங்க பொருளாளர் ராஜாத்தி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் பார்த்திபன், அன்னை இந்திரா கட்டுமான சங்க நிர்வாகி சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- காந்தி மகான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி முனியப்பன் இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தை உள்ளது.
- மின் கம்பியில் உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி முனியப்பன் மீது விழுந்தது, இதில் முனியப்பன் தூக்கி வீசப்பட்டார்.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் காந்தி மகான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி முனியப்பன் இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காந்தி மகான் தெரு பகுதியில் உள்ள மின் கம்பியில் உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி முனியப்பன் மீது விழுந்தது, இதில் முனியப்பன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் கட்டிடம் மேஸ்திரி முனியப்பன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று உடலை வாங்க மறுத்து திடீரென அரசு மருத்துவமனை வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து உறவினர் கூறும்போது:-
கிச்சிபாளையம் பகுதியில் மின் பாதைகள் சரிவர இல்லை என்றும் அதனை பராமரிக்காமலேயே உள்ளது என்றும் இதனால் கட்டிடம் மேஸ்திரி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். மின்சாரத் துறையின் அலட்சிய போக்கினாலே ஒரு உயிர் பறிபோய் விட்டது என்றும் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரண நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். தமிழக அரசு வழங்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த கட்டிடம் மேஸ்திரியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
- கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
- இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
சேலம்:
தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைத்து அதன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். அதேசமயம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai-15" என்ற பெயரில், 8-ந் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவேலையாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 19-ந் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 18004250110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
- சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்கள், கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிக பட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம்.
மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை சேலம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் தலா 2 இடங்களில் மேச்சேரி, வாழப்பாடி என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குளிர்பதனக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மி.மீ ஆகும். ஏப்ரல் மாதம் முடிய இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவு 86.0 மி.மீ ஆகும். ஆனால் நடப்பு ஆண்டில் (30.4.2023 வரை) 76.5 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்பெற தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.






