என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பிள்ளையில்பள்ளத்தில் தவறி விழுந்துதி.மு.க. நிர்வாகி மனைவி காயம்
- வீட்டின் முன்புறம் வாரசந்தை விரிவாக்க பணிகள் நடக்கிறது. அதற்காக இவர் வீட்டின் அருகே பள்ளம் தோண்டினர்.
- அதற்கு பாதுகாப்பாக தடுப்பு அரண் அமைக்காத காரணத்தால் அவரின் மனைவி மகாலஷ்மி(57) வீட்டின் வெளியே வந்த போது மண் சறுக்கி பள்ளத்தில் விழுந்தார்.
காகாபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டி 16-வது வார்டில் வசிப்பவர் மாரியப்பன்(வயது 64) இவர் 16-வது வார்டு தி.மு.க. அவை தலைவராக உள்ளார்.
இந்நிலையில் இவர் வீட்டின் முன்புறம் வாரசந்தை விரிவாக்க பணிகள் நடக்கிறது. அதற்காக இவர் வீட்டின் அருகே பள்ளம் தோண்டி னர்.
ஆனால் அதற்கு பாதுகாப்பாக தடுப்பு அரண் அமைக்காத காரணத்தால் அவரின் மனைவி மகாலஷ்மி(57) வீட்டின் வெளியே வந்த போது மண் சறுக்கி பள்ளத்தில் விழுந்தார். இதனால் தலையில் பலத்த அடிபட்டி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபற்றி மாரியப்பன் கூறுகையில், நகராட்சி நிர்வாகத்தினர் என் வீட்டு வாசலில் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் இணைப்பு செல்லாதவாறு ஜே.சி.பி.,மூலம் இடித்து அகற்றி விட்டனர். இதனால் நாங்கள் இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்து முறை யிட்டோம்.
போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் என் மனைவி தலையில் பலத்த அடிபட்டு 15 தையல் போடப்பட்டு தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






