search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதுசேலம் மாவட்டத்தில் 35,709 பேர் தேர்ச்சி
    X

    சேலம் குகை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடிவுகளை பார்த்த மாணவிகள் வெற்றிக்களிப்புடன் வந்த காட்சி.

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதுசேலம் மாவட்டத்தில் 35,709 பேர் தேர்ச்சி

    • பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் மாதம் 3-ந் தேதி முடிவடைந்தது.
    • சேலம் மாவட்டத்தில் 155 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் 2022-2023-ம் கல்வியாண்டு, பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் மாதம் 3-ந் தேதி முடிவடைந்தது.

    155 தேர்வு மையங்கள்

    சேலம் மாவட்டத்தில் 155 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காக வும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டது.

    இத்தேர்வு மையங்களில் மாணவிகள் 19 ஆயிரத்து 528 பேரும், மாணவர்கள் 17 ஆயிரத்து 733 பேரும் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதினார்கள். பின்னர் 10-ந்தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி 24 -ந்தேதி நிறைவடைந்தது.

    பிளஸ்-2 பொது தேர்வு முடிவு வெளியீடு

    இதனை தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவை வெளியிட்டது.

    இதில் சேலம் மாவட்டத்தில் மாணவிகள் 18 ஆயிரத்து 809 பேர், மாணவர்கள் 16,300 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 37 ஆயிரத்து 261 ேபர் தேர்வு எழுதியதில் 35109 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 94.22 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும்.

    மாவட்டத்தில் 2 ஆயிரத்து 152 ேபர் தேர்ச்சி பெறவில்லை. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் ேபர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.

    மகிழ்ச்சி

    தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிக்கூடத்துக்கு சென்று ஒவ்வொரு படத்திலும் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளோம் போன்ற மதிப்பெண் பட்டியலை பார்வையிட்டனர். பலர் செல்போன், கனினி வழியாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் தங்களது மதிப்பெண் பட்டியலை பார்த்தனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தும், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.

    Next Story
    ×