என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு"

    • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படு கிறது.
    • பதவி உயர்வு மற்றும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படு கிறது. அத்துடன் பதவி உயர்வு மற்றும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டிற் கான கலந்தாய்வு இன்று (8-ந்தேதி) தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டி ருந்தது. மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 3-ந்தேதி வரை அதற்கான விண்ணப்பங்கள் நேரிலும், எமிஸ் மூலமாகவும் பெறப்பட்டன.

    தொடர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களின் முன்னு ரிமை பட்டியல், மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று ெதாடங்க இருந்த கலந்தாய்வு திடீர் ஒத்தி வைக்கப்பட்டுள் ளது.

    இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு 2022-2023-ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்க ளுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக இந்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×