என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில்ஏற்காட்டில் மே தின ஊர்வலம்
    X

    ஏற்காட்டில் ஊர்வலம் நடைபெற்றபோது எடுத்த படம். 

    பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில்ஏற்காட்டில் மே தின ஊர்வலம்

    • ஏற்காட்டில், பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது.
    • ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றடைந்து.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பொன் ரவி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றடைந்து. காந்தி பூங்காவில் நடந்த கூட்டத்தில் பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் வரவேற்று பேசினார்.

    சங்க செயலாளர் ரகுராஜ் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் பேசினார். நிறைவாக சங்க பொருளாளர் ராஜாத்தி நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் பார்த்திபன், அன்னை இந்திரா கட்டுமான சங்க நிர்வாகி சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×