என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் பணிக்கு சேலத்தில் இருந்து 210 போலீசார் சென்றனர்
    X

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் பணிக்கு சேலத்தில் இருந்து 210 போலீசார் சென்றனர்

    • கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.
    • சேலம் லைன் மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர்.

    சேலம்:

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடி வடைகிறது.

    இதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கர்நாடக போலீசார் மற்றும் துணை ராணுவம் பாது காப்பு பணீயில் ஈடுபட்டு உள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் கோவை மேற்கு மண்டல காவல்துறையி லிருந்து 210 போலீஸாரும், 60 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுகின்றனர்.

    இவர்கள் நேற்று சேலம் லைன் மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர்.

    Next Story
    ×